காஸா எல்லைக்குச் செல்லும் ஐநா தலைவர்

கெய்ரோ: காஸாவுடனான எகிப்திய எல்லைக்கு ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் சனிக்கிழமை (மார்ச் 23ஆம் தேதி) செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில் சண்டை நிறுத்தத்துக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் வகையில் அவர் காஸா எல்லைக்குச் செல்கிறார்.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நடந்து வரும் போர் காரணமாக மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்கள் அவுதியுறுகின்றனர்.

காஸாவைச் சேர்ந்த 2.3 மில்லியன் பாலஸ்தீனர்களில் பெரும்பாலானோர் ராஃபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ராஃபா நகரில் ஹமாஸ் படைகள் இருப்பதாகவும் அவற்றை வீழ்த்தினால் மட்டுமே ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்க முடியும் என்று இஸ்‌ரேல் நம்புகிறது.

இதனால் ராஃபாவில் நிலம் வழித் தாக்குதலை நடத்த இஸ்‌ரேல் தயாராகி வருகிறது.

அவ்வாறு நேர்ந்தால் உயிர்ச் சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காஸாவுக்கு அனுப்பிவைக்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் எகிப்தின் வடக்குப் பகுதியில் உள்ள அல் அரிஷ் நகரில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து அவை காஸாவின் தென் பகுதியில் உள்ள ராஃபாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

அல் அரிஷ் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள ஐநா மனிதாபிமானப் பிரிவு ஊழியர்களை திரு குட்டரஸ் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஸா சண்டை நிறுத்தம் தொடர்பான வாக்களிப்பு ஒத்திவைப்பு

இஸ்‌ரேல்-ஹமாஸ் இடையே சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க ஐநாவின் பாதுகாப்பு மன்றம் நடத்தவிருந்த வாக்களிப்பு மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா முன்மொழிந்த நகல் தீர்மானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று இஸ்‌ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு இஸ்‌ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.

அமெரிக்கா முன்மொழிந்த நகல் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் ஏற்க மறுத்து அவை ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தன.

அமெரிக்காவின் நகல் தீர்மானத்தை அரபு நாடுகளும் ஏற்க மறுத்துன.

காஸா மீதான தாக்குதலை இஸ்‌ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்று அவை அதிருப்திக் குரல் எழுப்பின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!