உக்ரேனில் ஆளில்லா வானூர்தி மூலம் ரஷ்யா தாக்குதல்

மாஸ்கோ: உக்ரேன் மீது ரஷ்யா ஒரே இரவில் 17 ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் 14ஐ உக்ரேனின் ஆகாயப் படையின் சாதனங்கள் அழித்ததாக உக்ரேனின் ஆகாயப்படை திங்களன்று தெரிவித்தது.

கப்பலிலிருந்து ஏவப்பட்ட’கேஎச் - 59’ ரக ஏவுகணையையும் அழித்ததாக அது மேலும் குறிப்பிட்டது.

‘எஸ் - 300’ எனப்படும் தரையிலிருந்து விண்ணில் சீறிப்பாய்ந்து, நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரேன்மீது ரஷ்யா பாய்ச்சியதாக உக்ரேன் ஆகாயப்படை ‘டெலிகிராம்’ செயலி மூலம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.

எத்தனை ஏவுகணைகளை ரஷ்யா பாய்ச்சியது, எந்த இலக்குகளை நோக்கி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது போன்ற விவரங்களை அதில் உக்ரேன் ஆகாயப்படை குறிப்பிடவில்லை என ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

உக்ரேனின் வடகிழக்கில் உள்ள கார்கிவ் பகுதியை ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக அவ்வட்டார ஆளுநர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

இந்தத் தாக்குதலால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் சில குடியிருப்பு அல்லாத கட்டடங்களின் முகப்புகள் சேதமடைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மை காலமாக, உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தங்கள் வான்வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகவும் அவ்விரு நாடுகளும் முக்கியமான ஆற்றல், ராணுவம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும் ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!