மலேசிய பொருளியல் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை

கோலாலம்பூர்: மலேசிய பொருளியல் கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் எதிர்பார்த்த அளவுக்கு வேகமெடுக்கவில்லை. சீனாவுக்கான ஏற்றுமதி குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

மலேசிய பொருளியல் மீட்சியடைய இன்னும் காலம் பிடிக்கலாம் என்பதை இது காட்டுகிறது.

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அக்டோபர்-டிசம்பர் இடைப்பட்ட காலத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 3.4 விழுக்காடு அதிகரித்தது என்று மலேசிய புள்ளியியல் துறை ஜனவரி 19ஆம் தேதி வெளியிட்ட முன்னோடி மதிப்பீட்டில் தெரிவித்தது.

இது, புளூம்பெர்க் ஆய்வு மதிப்பிட்ட 4.1 விழுக்காட்டைவிடக் குறைவு.

கட்டுமானத் துறையில் ஏற்பட்ட தொய்வு, உற்பத்தி துறையில் ஏற்பட்ட தேக்கம் போன்றவை பொருளியல் வேகத்தைக் குறைத்துள்ளன.

கடந்த ஆண்டு முழுவதும் இரு துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி 3.8 விழுக்காடாக இருந்தது. இதுவும் மத்திய வங்கி மதிப்பிட்ட நான்கு விழுக்காடு வளர்ச்சியைவிடக் குறைவு.

சீனாவின் ஏற்ற இறக்கமான பொருளியல் வளர்ச்சி மலேசிய பொருளியலை வெகுவாகப் பாதித்துள்ளது.

ஓராண்டு முன்புடன் ஒப்பிடும்போது டிசம்பரில் வெளிநாட்டு ஏற்றுமதி பத்து விழுக்காடு சரிந்துள்ளது என்று அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சு ஜனவரி 19ஆம் தேதி தெரிவித்தது. மலேசியாவின் ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளியான சீனாவுக்கான விற்பனை மட்டும் 1.5 விழுக்காடு குறைந்தது என்று அது கூறியது.

2023ஆம் ஆண்டில் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்ததற்கு வெளிநாட்டுத் தேவை குறைந்ததே முக்கிய காரணம் என்று முவாமலாட் மலேசியா வங்கியின் முஹமட் அஃப்ஸானிஸாம் அப்துல் ரஷித் தெரிவித்தார்.

இதில், மெதுவடையும் சீனாவின் பொருளியல் முக்கிய பங்காற்றுகிறது. 2024ஆம் ஆண்டிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!