அமெரிக்க கொவிட்-19 நோயாளிகளில் பாதிப்பேருக்கு ஜேஎன்.1 கிருமித்தொற்று

நியூயார்க்: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்தில் அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருகிறது.

தற்போது அங்கு பரவும் தொற்றில் ஜேஎன்.1 என்னும் கொவிட்-19 துணைக் கிருமியே அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே பரவிய பிஏ.2.86 கிருமி வகையிலிருந்து ஜேஎன். 1 உருவானது.

அந்தத் துணைக் கிருமி முதன்முதலில் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.

டிசம்பர் மாத நடுப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, அமெரிக்கா முழுவதும் உள்ள கொவிட்-19 நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதிப்பேர், அதாவது 44 விழுக்காட்டினர் ஜேஎன்.1 வகைக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது, நவம்பர் மாதம் 7 விழுக்காடாக இருந்தது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்து உள்ளது. டிசம்பரில் அதன் பரவல் வேகம் அதிகரித்து உள்ளது.

இதர வகைக் கிருமிகளைக் காட்டிலும் ஜேஎன்.1 வேகமாகப் பரவக்கூடியது என்பதை இது உணர்த்துகிறது என்றும் நோய் எதிர்ப்புத் திறனை முறியடிப்பதிலும் இதர கிருமிகளை இது மிஞ்சிவிட்டது என்றும் அந்த நிலையம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!