ஹெலிகாப்டரில் பள்ளிக்குச் சென்ற மலேசிய மாணவர்

மலே­சிய மாண­வர் ஒரு­வர் ஹெலி­காப்­ட­ரி­லி­ருந்து இறங்கி பள்­ளிக்­குச் சென்­ற­தா­கக் கூறப்­படும் விவ­கா­ரம் பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கும் நிலை­யில் மலே­சிய காவல்­துறை அது குறித்து விசா­ரணை நடத்தி வரு­கிறது.

சிலாங்­கூ­ரின் ஷா ஆலாம் புல்­வெ­ளி­யில் ஹெலி­காப்­டர் ஒன்று தரை­யி­றங்­கி­யது. அதிலிருந்து இறங்­கிய மாண­வர் ஒரு­வர் பள்­ளிக்­குச் சென்­றார் என்று தக­வல்­கள் தெரி­விக்கின்­றன.

இந்­தச் சம்­ப­வத்தை ஷா ஆலாம் மாவட்ட காவல்­துறை பொறுப்பு அதி­கா­ரி­யான முஹ­மட் இக்­பால் இப்­ரா­ஹிம் உறுதி செய்­துள்­ளார்.

மலே­சிய சிவில் போக்­கு­ வரத்து ஆணை­யம் சம்­ப­வத்தை விசா­ரித்து வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

“ஏப்­ரல் 17ஆம் தேதி காலை 8.00 மணி­ய­ள­வில் ஜாலான் குனுங் நுவாங் யு11/11டி அருகே உள்ள திறந்­த­வெ­ளி­யில் ஹெலி­காப்­டர் ஒன்று தரை­யி­றங்கி 15 நிமி­டங்­கள் அங்கு இருந்­தது,” என்று திரு முஹ­மட் இக்­பால் தெரி­வித்­தார்.

ஷா ஆலா­மின் காவல்­துறை உள்­நாட்­டுப் பாது­காப்­புப் பிரி­வும் பொது உத்­த­ரவு பிரி­வும் சம்­ப­வம் குறித்து புகார் செய்­துள்­ளன. இதை­ய­டுத்து அர­சாங்க அமைப்­பு­கள் மேல் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றன.

குடி­யி­ருப்­பா­ளர் ஒரு­வர் காவல்­து­றைக்கு அனுப்­பி­யுள்ள காணொ­ளி­யில் ஹெலி­காப்­ட­ரில் இருந்து இறங்­கிய மாண­வர் பள்­ளிக்­குள் நுழை­வ­தைக் காட்­டு­கிறது என்று உள்­ளூர் ஊட­கங்­கள் தெரி­வித்து உள்­ளன.

ஆனால் எந்­தப் பள்­ளிக்கு மாண­வர் சென்­றார் என்­பது குறித்து விவ­ர­மில்லை. காவல்­துறை விசா­ரணை தொடர்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!