பொம்மை சண்டை: ஊரடங்கு, 31 பேர் கைது, 100 வழக்குகள்

இந்­தி­யா­வின் மகா­ராஷ்­டிரா மாநிலத்­தில் உப்­புக்­குப் பெறாத விவகாரம் பெரும் பிரச்­சி­னை­யானதை அடுத்து 48 மணி நேரம் ஊரடங்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது. 31 பேர் கைது செய்­யப்­பட்டு உள்ள­னர். 100க்கும் மேற்­பட்ட வழக்­கு­கள் பதி­யப்­பட்­டுள்­ளன.

அந்த மாநி­லத்­தின் ஜால்கான் என்ற மாவட்­டத்­தில் அமல்­நேர் என்ற நக­ரில் கடந்த வெள்­ளிக்­கிழமை இரவு விளையாட்டுப் பொம்­மை­கள் தொடர்­பில் இரண்டு பிரி­வி­ன­ருக்கு இடை­யில் நடந்த பேச்சு முற்றி வன்­செ­ய­லாக மாறி­யது என்று இந்­தியா டுடே நேற்று தெரி­வித்­தது.

இரண்டு தரப்­பி­ன­ரும் பயங்கர அடி­த­டி­யில் இறங்­கி­னர்.

தெரு­வில் பொம்­மை­களை வண்­டியில் விற்­றுச் சென்ற ஒருவரைத் தாக்கி அவ­ரின் வண்­டியைத் தலைகுப்­புற தள்­ளி­விட்­ட­னர். சாலை எங்­கும் செங்­கற்­கள் உடைந்து கிடந்­தன.

தக­வல் கிடைத்­து சம்­பவ இடத்­திற்கு விரைந்த அதி­காரி­கள் 31 பேரைக் கைது செய்­தனர். பல­ருக்­கும் எதி­ராக வழக்கு­களைப் பதிந்­த­னர்.

ஜூன் 10ஆம் தேதி முதல் இன்று திங்­கள்­கி­ழமை காலை 11 மணி வரை ஊர­டங்கை அவர்கள் விதித்­த­னர்.

தேவை எனில் ஊர­டங்கு நீட்­டிக்­கப்­படும் என்­றும் இப்­போது நிலை­மை­ கட்­டுக்­குள் இருப்­ப­தா­க­வும் நேற்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

புர­ளி­களை நம்ப வேண்­டாம் என்று மக்­களை அதி­கா­ரி­கள் கேட்­டுக்­கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!