மூத்தோரை பராமரிப்போருக்கு உடல்நலப் பிரச்சினைகள்

மூத்­தோ­ரைக் கவ­னித்­துக்­கொள்­ளும் பரா­ம­ரிப்­பா­ளர்­களில் குறிப்­பிட்ட ஒரு­சி­லர் உட­ல­ள­வில் பாதிப்பை எதிர்­நோக்­கு­வதாக ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

சுகா­தா­ரப் பிரச்­சினை ஏற்­பட்­டால், பல­வீ­ன­மான முதி­யோரை படுக்­கை­யில் இருந்து சக்­கரநாற்­கா­லிக்கு மாற்­று­வது போன்ற பணி­களில் ஈடு­ப­டு­வது அவர்­க­ளுக்கு சிர­மத்­தைக் கொடுக்­க­லாம் என்­றும் டியூக்-என்­யு­எஸ் மருத்­துவ நிலை­யத்­தில் நடத்­தப்­பட்ட ஆய்வு குறிப்­பி­டு­கிறது.

பரா­ம­ரிப்­பில் ஈடு­படும் அதே­ச­ம­யம் தங்­க­ளது சுகா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளி­லும் கவ­னம் செலுத்­தக்­கூ­டிய சவா­லான நிலைக்­கும் மனஉளைச்­ச­லுக்­கும் அவர்­கள் தள்­ளப்­ப­ட­லாம் என்று ஆய்­வின் முதன்மை அதி­கா­ரி­யான துணைப் பேரா­சி­ரி­யர் ராகுல் மல்­ஹோத்ரா தெரி­வித்­துள்­ளார்.

முதுமை ஆராய்ச்சி மற்­றும் கல்வி நிலை­யத்­தின் தலைமை ஆராய்ச்­சி­யா­ள­ரான அவர், 75 வய­தி­னர் மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­தி­ன­ரைப் பரா­ம­ரிப்­போர் தொடர்­பான புதிய ஆய்வை முன்­னின்று நடத்­தி­னார்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் தொடங்கி ஈராண்டு கழிந்த பின்­னர் நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாட்டை அனு­ப­விக்­கும் பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளின் விகி­தத்­தில் மிகச் சிறிய ஏற்­றமே இருந்­த­தாக அவர் கூறி­னார்.

மேலும் அவர் தெரி­விக்­கை­யில், “உலக அள­வி­லும் சிங்­கப்­பூ­ரி­லும் மூத்­தோர் மக்­கள்­தொகை வேக­மாக அதி­க­ரிப்­பதில் 75 வய­தி­ன­ரும் அதற்கு மேற்­பட்ட வய­தி­ன­ருமே முக்கியப் பங்கு வகிக்­கின்­ற­னர்.

“இது­போன்ற மூத்த வய­தி­னர் தங்­க­ளது அன்­றாட வாழ்க்கை நடை­மு­றை­யில் குறைந்­த­பட்­சம் ஒரு நட­வ­டிக்­கைக்­கா­வது உத­வியை நாடு­கின்­ற­னர்.

“குளிப்­பது, உடை மாற்­று­வது போன்ற நட­வ­டிக்­கை­களை அதற்கு உதா­ர­ண­மா­கச் சொல்­ல­லாம்,” என்று டாக்­டர் மல்­ஹோத்ரா கூறி­னார்.

மூத்த வய­தி­ன­ரைப் பரா­மரிப்­போ­ரின் நிலையை அறிய ‘TraCE’ என்­னும் பெய­ரி­லான ஆய்வு நடத்­தப்­பட்­டது. மூத்த சிங்­கப்­பூர்­க­ளின் குடும்பப் பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளி­டையே பரா­ம­ரிப்பு உரு­மாற்­றம் என்­னும் பொரு­ளில் அந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. குடும்ப உறுப்­பி­ன­ரைக் கவ­னித்­துக்­கொள்­ளும் 278 பேரி­டம் நடத்­தப்­பட்ட ஆய்­வின் முடி­வு­கள் கடந்த மார்ச் மாதம் முதுமை ஆராய்ச்சி மற்­றும் கல்வி நிலை­யத்­தின் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யி­டப்­பட்­டது.

ஆய்வு முடி­வைக் குறிப்­பிட்­டுப் பேசிய டாக்­டர் மல்ஹோத்ரா, “இதர ஆய்­வு­க­ளைப் போல் இல்­லா­மல், பரா­ம­ரிப்­பாளர்­க­ளின் நீண்­ட­கா­லப் பிரச்­சி­னை­களை ஆராய்ந்­தது இந்த ஆய்வு. ஆய்­வில் கலந்­து­கொண்­டோ­ரின் சுகா­தார நிலை­யும் பரா­ம­ரிப்­புப் பொறுப்­பு­களும் காலப்­போக்­கில் எவ்­வாறு மாற்­றம் கண்­டுள்­ளன என்­ப­தில் கவனம் செலுத்தப்பட்டது,” என்­றார்.

பராமரிப்பு நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடும் என்கிறது புதிய ஆய்வு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!