இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இருமடங்கு

விபத்துகளில் மாண்ட மோட்டார் சைக்கிளோட்டிகள், உடன் பயணம் செய்தோர் எண்ணிக்கை

இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் மோட்­டார் சைக்­கிள் விபத்­து­களில் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை, கடந்த ஈராண்­டு­க­ளின் அதே கால­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், கிட்­டத்­தட்ட இரு­ம­டங்­கா­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விபத்­து­களில் உயி­ரி­ழந்த மோட்­டார் சைக்­கிள் ஓட்­டு­நர்­கள், அதன் பின்­னி­ருக்­கை­யில் பய­ணம் செய்­தோ­ரின் மொத்த எண்­ணிக்கை அது.

2021, 2022ஆம் ஆண்­டு­களில் அவ்­வாறு உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை முறையே 12 மற்­றும் 12.

இந்த ஆண்­டின் முதல் மூன்று மாதங்­களில் 21 பேர் மோட்­டார் சைக்­கிள் விபத்­து­களில் உயி­ரி­ழந்­த­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது.

அது முன்­னெப்­போ­தும் இல்­லாத எண்­ணிக்கை என்று மோட்­டார் சைக்­கிள், சாலைப் பாது­காப்­புத் துறை வல்­லு­நர்­கள் கூறி­னர்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக சாலை விபத்­தில் மர­ண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை நிலை­யாக இருந்­த­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

சாலை விபத்­தில் மாண்ட மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­கள், அவர்­க­ளு­டன் பய­ணம் செய்­தோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­பது அச்­சு­றுத்­த­லாக அமைந்­தா­லும் இது­கு­றித்து மேலும் ஆய்­வு­கள் நடத்­தப்­பட வேண்­டும் என்று சிங்­கப்­பூர் சாலைப் பாது­காப்பு மன்­றத் தலை­வர் பெர்­னார்ட் டே கூறி­னார்.

அப்போதுதான் தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்றார் அவர்.

ஒரு காலாண்டில் 21 பேர் உயிரிழப்பு என்ற எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகம்தான் என்றார் அவர்.

மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­கள் அவர்­க­ளின் வாக­னங்­களை முறை­யா­கக் கட்­டுப்­ப­டுத்­தா­த­தும் போக்­கு­வ­ரத்­துச் சமிக்­ஞை­களை மீறி வாக­னங்­க­ளைச் செலுத்­தி­ய­தும் விபத்­து­க­ளுக்­கான முக்­கி­யக் கார­ணங்­களில் சில என்று காவல்­துறை குறிப்­பிட்­டது.

இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் சாலை விபத்­து­களில் மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­களும் பின்­னி­ருக்­கை­யில் பய­ணம் செய்­தோ­ரும் மாண்ட சம்­ப­வங்­களில் பெரும்­பா­லும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சிங்­கப்­பூர் மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­களா வெளி­நாட்டு மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­களா என்ற விவ­ரம் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

சென்ற ஆண்டு 3,854 விபத்­து­களில் மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­களும் பின்­னி­ருக்­கை­யில் அமர்ந்து பய­ணம் செய்­தோ­ரும் பாதிக்­கப்­பட்­ட­னர். அதற்கு முந்­தைய ஆண்டு அந்த எண்­ணிக்கை 3,464 ஆக இருந்தது.

சென்ற ஆண்டு முழு­வ­தும் விபத்­து­களில் உயி­ரி­ழந்த அத்­த­கை­யோ­ரின் எண்­ணிக்கை 47.

2021ஆம் ஆண்­டில் 50 பேர் மோட்­டார் சைக்­கிள் விபத்­து­களில் மாண்­ட­னர்.

“சாலைப் பாது­காப்பு குறித்த விழிப்­பு­ணர்வு அனை­வ­ரி­ட­மும் அதி­க­ரிக்க வேண்­டும்.

“மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­கள், மற்ற வாகன ஓட்­டு­நர்­கள் என அனை­வ­ரும் சாலை­களில் கூடு­தல் கவ­னத்­து­டன் இருக்க வேண்­டும்,” என்று மோட்­டார் சைக்­கிள் பாது­காப்பு, விளை­யாட்டு மன்­றத்­தின் தலை­வர் ஓங் கிம் ஹுவா கூறி­னார்.

“விபத்­தில் மர­ணம் ஏற்­ப­டு­வ­தற்­கான பல்­வேறு கார­ணங்­களில் ஓட்­டு­ந­ரின் வயது, வாக­ன­மோட்­டிய அனு­ப­வம், சில நேரங்­களில் வானிலை போன்ற அம்­சங்­க­ளுக்கு முக்­கி­யப் பங்­குண்டு,” என்­றார் திரு ஓங்.

அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தலைக்­க­வ­சம், அங்கி, கையு­றை­கள், பொருத்­த­மான கால­ணி­கள் ஆகி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்­தும்­படி மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­க­ளுக்கு காவல்­துறை ஆலோ­சனை கூறி­யது.

அனு­ம­திக்­கப்­பட்ட வேகத்­தில் பய­ணம் செய்­யும்­படி அது அறி­வு­றுத்­தி­யது.

பெரிய வாக­னங்­க­ளின் ஓட்­டு­நர்­க­ளுக்­குப் பார்­வையை மறைக்­கும் ‘பிளைண்ட் ஸ்பாட்’ எனும் இடங்­க­ளைத் தவிர்க்­கும்­படி மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­க­ளுக்கு அதி­கா­ரி­கள் ஆலோ­சனை கூறி உள்­ள­னர்.

மேலும், மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­கள் சாலைப் போக்­கு­வ­ரத்­துச் சமிக்­ஞை­களை மதித்து நடப்­பது மிக முக்­கி­யம் என்று காவல்­து­றை­யி­னர் வலி­யு­றுத்­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!