இந்தியா, ரஷ்யாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா உறுதி

சீனா தமது இரு பெரிய அண்டை நாடு­க­ளான இந்­தி­யா­வு­ட­னும் ரஷ்­யா­வு­ட­னும் உள்ள ஒருங்­கி­ணைப்­பை­யும் ஒத்­து­ழைப்­பை­யும் மேலும் வலுப்­ப­டுத்த உறுதி தெரி­வித்­துள்­ளது. இந்­தியா சென்­றுள்ள சீன வெளி­யு­றவு அமைச்­சர் சின் காங், இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­க­ரை­யும் ரஷ்ய வெளி­யுறவு அமைச்­சர் செர்­கய் லேவ்­ரோவையும் தனித்­த­னி­யா­கச் சந்­தித்­தார்.

ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்­பில் இடம்­பெற்­றுள்ள வெளி­யு­றவு அமைச்­சர்­க­ளின் இரு­நாள் மாநாடு நேற்­றும் நேற்று முன்­தி­ன­மும் இந்­தி­யா­வின் கோவா மாநி­லத்­தில் நடை­பெற்­றது. அமைப்­பில் இடம்­பெற்­றுள்ள வெளி­யு­றவு அமைச்­சர்­கள் ஒரு­வரை­யொ­ரு­வர் சந்­தித்து தங்­க­ளது நாடு­க­ளுக்கு இடை­யி­லான உறவை வலுப்­ப­டுத்­து­வது தொடர்­பான ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­ச­ரைச் சந்­தித்த சீன வெளி­யு­றவு அமைச்­சர், உக்­ரேன் நெருக்­கடி தீர்­வுக்கு சீனா ஒத்­து­ழைக்­கத் தயார் என்று தெரி­வித்­தார்.

அப்­போது, அமைப்­பில் இடம்­பெற்­றள்ள எல்லா நாடு­க­ளு­ட­னும் தொடர்­பு­க­ளை­யும் ஒத்­து­ழைப்­பை­யும் வலுப்­ப­டுத்த சீனா­வும் ரஷ்­யா­வும் ஒப்­புக்­கொண்­டன. கடந்த 2001ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட ‘எஸ்­சிஓ’ எனப்­படும் ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்பில் ஆசிய, ஐரோப்­பிய நாடு­கள் இடம்­பெற்று உள்­ளன.

கோவா மாநாட்­டில் கலந்­து­கொள்ள பாகிஸ்­தான் வெளி­யுறவு அமைச்­சர் பிலா­வல் புட்டோ வந்­தி­ருந்­தது முக்­கிய செய்­தி­யாக ஊட­கங்­களில் பகி­ரப்­பட்­டது. கிட்­டத்­தட்ட 12 ஆண்­டு­களில் பாகிஸ்­தான் வெளி­யு­றவு அமைச்­சர் ஒரு­வர் இந்­தியா வரு­வது இதுவே முதல்­முறை. குறிப்­பாக, மோடி அர­சாங்­கம் அமைந்த பின்­னர் பாகிஸ்­தான் வெளி­யு­றவு அமைச்­சர் இந்­தி­யா­வுக்கு வருகை தரு­வ­தும் இதுவே முதல் சம்­ப­வம்.

பிலா­வல் புட்டோ இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் ஜெய்­சங்­க­ரு­டன் கைகு­லுக்­கிக் கொண்­ட­போ­தி­லும் இரு­வ­ருக்­கும் இடை­யில் நேர­டிப் பேச்­சு­வார்த்தை எது­வும் இடம்­பெ­ற­வில்லை.

சீன வெளி­யு­றவு அமைச்­சர் சின் காங்­கைச் சந்­தித்த பின்­னர் அறிக்கை வெளி­யிட்ட திரு ஜெய்­சங்­கர், இந்­தியா-சீனா இடையே மூன்­றாண்­டாக நீடிக்­கும் கிழக்கு லடாக் எல்­லைப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண்­பது பற்றி சீன அமைச்­ச­ரு­டன் ஆலோ­சனை நடத்­தி­ய­தாகக் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!