ஆசிய வட்டாரத்தில் பூசல்கள் தவிர்க்கப்பட வேண்டும்: அமைச்சர்

ஆசி­யா­வில் ஒரு போர் மூண்­டால் அது உக்­ரேன் போரை­விட மோச­மா­ன­தாக இருக்­கும். எனவே அது­போன்ற உர­சல்­களைத் தவிர்ப்­பது அடுத்த பத்­தாண்­டு­களில் எல்லா நாடு­களின் தலை­யா­யப் பொறுப்­பாக இருக்க வேண்­டும் என்று தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் தெரி­வித்­துள்­ளார்.

“அது­போன்ற மோதல்­கள் முத­லாம் உல­கப் போருக்­குப் பிந்­திய பேர­ழி­வாக இருக்­கும். அந்­தப் போரில் நான்கு பேர­ர­சு­கள் அழிந்­த­தோடு நாடு­கள் மற்­றும் அர­சாங்­கங்­க­ளுக்­கான வரை­ப­டம் மாற்றி வரை­யப்­பட்­டது.

“எனவே நாடு­க­ளுக்கு இடை­யி­லான பூச­லைத் தவிர்க்க அர­ச­தந்­திர முயற்­சி­களை இரு­ம­டங்கு அதி­கப்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யம் உள்­ளது,” என்­றார் அவர்.

‘ஐஎம்­டி­இ­எக்ஸ் ஏஷியா’ எனப்­படும் கடல்­துறை தற்­காப்புக் கண்­காட்சி மற்­றும் ஆசிய மாநாட்­டின் தொடக்க நிகழ்­வில் கலந்­து­கொண்டு அவர் பேசி­னார்.

“இந்த கடல்துறை தற்­காப்பு மாநாடு, கொவிட்-19 காலத்­தைக் கடந்து நான்கு ஆண்­டு­களுக்­குப் பிறகு முழு அள­வில் நடத்­தப்­ப­டு­கிறது. நாளை வரை நீடிக்­கும் மூன்று நாள் மாநாடு சாங்கி கண்­காட்சி மையத்­தில் நடை­பெ­று­கிறது.

உக்­ரேன் போர் நிகழ்ந்­து­கொண்டு இருக்­கும் வேளை­யி­லும் அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான பதற்­றம் அதி­க­ரித்து வரும் நிலை­யி­லும் இந்­தத் தற்­காப்பு மாநாடு நடத்­தப்­ப­டு­வ­தாக டாக்­டர் இங் தெரி­வித்­தார்.

வட்­டார நிலைத்­தன்­மை­யை­யும் பாது­காப்­பை­யும் மேம்­ப­டுத்த இந்த மாநாடு ஒரு முக்­கிய தள­மாக விளங்­கு­கிறது என்­றார் அவர்.

“ஐரோப்­பா­வி­லும் ஆசி­யா­வி­லும் ஒரே நேரத்­தில் போர் நிகழ்ந்­தால் அது நாம் எல்­லா­ருக்­கும் பேர­ழி­வாக அமைந்­து­வி­டும்.

“போருக்­கான சூழலைத் தவிர்க்க பொரு­ளி­யல் உற­வு­களை வலுப்­ப­டுத்தி அதனை நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்­டும் என்பதை உக்­ரேன் மீதான ரஷ்­யப் படை­யெ­டுப்பு ஏற்­கெ­னவே உணர்த்தி உள்­ளது.

“மேலும், கடந்த முப்­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நாடு­கள் கட்டி எழுப்­பிய ஒன்­றை­யொன்று சார்ந்­தி­ருக்­கும் போக்­கும் இப்­போ­து தலை­கீ­ழாக மாறி­விட்­டது.

“ரஷ்யா ஐரோப்­பா­வு­டன் இணக்­க­மா­கச் செயல்­படும் என்­பதை நான் தொடர்­பு­கொண்டு பேசிய ஐரோப்­பி­யத் தலை­வர் ஒரு­வர்­கூட ஒப்­புக்­கொள்­ள­வில்லை. இந்­தத் தலை­முறை மட்­டு­மல்ல, நெடுங்­கா­லத்­துக்கும் இதே நிலைமை நீடிக்­கும் என்­பது அவர்­க­ளின் கருத்­தாக உள்­ளது.

“ஐரோப்பாவுடன் ரஷ்யா இணைந்து செயல்­படும் என்ற நம்­பிக்கை காற்­றில் பறந்­து­விட்­டது.

“இப்­படி ஒரு நிலைமை ஆசி­யா­வில் ஏற்­ப­டுமா, அது இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் பர­வுமா என்­பதே இப்­போது நம் முன் உள்ள முக்­கிய கேள்வி.

“உக்­ரேன்போல ஆசி­யா­விலும் பூசல் ஏற்­பட்­டால், குறிப்­பாக அமெ­ரிக்கா-சீனா இடையே மோதல் நிகழ்ந்­தால் அது கற்­பனை செய்து பார்க்க இய­லாத இழப்­பு­களை ஏற்­ப­டுத்­தும். நாம் இப்­போ­து எதிர்­கொள்­ளும் உல­கிற்கு சொல்­ல­வொண்­ணாத் துயரை உரு­வாக்­கி­விடும்,” என்று டாக்­டர் இங் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!