அதிபர் புட்டினைக் கொல்ல உக்ரேன் சதி: ரஷ்யா குற்றச்சாட்டு

அதி­பர் விளா­டி­மிர் புட்­டினை கொலை செய்ய உக்­ரேன் முயன்­ற­தாக ரஷ்யா குற்­றம் சுமத்தி உள்­ளது. செவ்­வாய்க்­கி­ழமை இரவு மாஸ்­கோ­வில் கிரெம்­ளின் மாளிகை மீது ஆளில்லா வானூர்­தி­கள் மர்­ம­மான முறை­யில் பறந்­த­தா­க­வும் தாக்­கு­த­லைத் தொடுக்­கும் நோக்­கில் அவை பறக்­க­விடப்­பட்­ட­தா­க­வும் ரஷ்யா தெரி­வித்துள்­ளது.

இருப்­பி­னும் அந்த வானூர்­தி­கள் செய­லி­ழக்­கப்­பட்­ட­தாக ரஷ்ய செய்தி நிறு­வ­னங்­கள் கூறின. சம்­ப­வம் நிகழ்ந்த வேளை­யில் அதி­பர் புட்­டின் கிரெம்­ளின் மாளி­கை­யில் இல்லை என்­றும் மாளி­கைக் கட்­ட­டங்­க­ளுக்கு எந்த ஒரு சேத­மும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் அவை குறிப்­பிட்­டன.

இது தொடர்­பாக சரி­பார்க்­கப்­ப­டாத காணொளி ஒன்று ரஷ்ய சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றப்­பட்­டது. மத்­திய மாஸ்­கோ­மீது புகை வெளி­யா­வதை அது காட்­டி­யது. ரஷ்­யா­வின் இந்­தக் குற்­றச்­சாட்டு தொடர்­பாக உக்­ரேன் எந்தக் கருத்­தை­யும் தெரி­விக்­க­வில்லை.

இது ஒரு திட்­ட­மிட்ட பயங்­க­ர­வா­தச் செயல் என்­றும் இது­போன்ற செயல்­க­ளுக்கு எப்­போது, எப்­ப­டி பதி­லடி தர­வேண்­டும் என்­பது ரஷ்­யா­வுக்­குத் தெரி­யும் என்­றும் ஆர்­ஐஏ செய்தி நிறு­வ­னம் கூறி­யது. மே 9 வெற்­றிப் பேர­ணியை ரஷ்யா நடத்த இருக்­கும் வேளை­யில் புட்­டி­னைக் கொல்ல முயற்சி நடந்­தி­ருப்­ப­தா­க­வும் அது தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!