பிரான்சில் மே தினப் ஆர்ப்பாட்டத்தில் வெடித்தது வன்முறை; காவல்துறையினர் 108 பேர் காயம்; இதுவரை 291 பேர் கைது

மே தினத்­தின்­போது பிரான்­சின் பல பகு­தி­க­ளி­லும் இடம்­பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது வெடித்த வன்­மு­றை­யில் குறைந்­தது 108 காவல்­துறை அதி­கா­ரி­கள் காய­முற்­ற­தாக அந்­நாட்­டின் உள்­துறை அமைச்­சர் ஜெரால்ட் டஹ்­ம­னன் தெரி­வித்­துள்­ளார்.

இப்­படி அதிக எண்­ணிக்­கை­யில் காவல்­து­றை­யி­னர் காய­ம் அடைந்­தது அரி­தி­னும் அரிது என்று திரு ஜெரால்ட் குறிப்­பிட்­டார். இதன் தொடர்­பில் 291 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

ஓய்­வூ­தி­யச் சீர்­தி­ருத்­தங்­களை எதிர்த்து பல நூறா­யி­ரக்­க­ணக்­கா­னோர் மே தினப் ஆர்ப்­பாட்­டங்­களில் பங்­கேற்­ற­னர்.

பெரும்­பா­லான இடங்­களில் ஆர்ப்­பாட்­டம் அமை­தி­யாக நடை­பெற்ற நிலை­யில், சில இடங்­களில் காவல்­து­றை­யி­னரை நோக்கி போராட்­டக்­கா­ரர்­கள் பெட்­ரோல் குண்­டு­க­ளை­யும் வாணங்­க­ளை­யும் வீசி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து, காவல்­து­றை­யி­னர் கண்­ணீர்ப் புகைக்­குண்­டு­களை வீசி­யும் நீரைப் பீய்ச்­சி­ய­டித்­தும் அவர்­க­ளைக் கலைக்க முயன்­ற­னர்.

போராட்­டக்­கா­ரர்­களில் எத்­தனை பேர் காய­முற்­ற­னர் என்­பது தெளி­வா­கத் தெரி­ய­வில்லை என பிபிசி செய்தி கூறி­யது.

இத­னி­டையே, ஆர்ப்­பாட்­டங்களின்போது இடம்­பெற்ற வன்­மு­றையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று பிரெஞ்சு பிர­தமர் எலி­ச­பெத் போர்ன் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

அதே நேரத்­தில், பல்­வேறு நக­ரங்­களில் அமை­தி­யா­கப் போராடி, பொறுப்­பு­டன் நடந்­து­கொண்­ட­வர்­க­ளை­யும் அவர் பாராட்­டினார்.

தலை­ந­கர் பாரி­சில் 112,000 பேர் உட்­பட நாடு முழு­வ­தும் இடம்­பெற்ற ஆர்ப்பாட்டங்­களில் ஏறத்­தாழ 782,000 பேர் பங்­கேற்­ற­தாக பிரெஞ்சு உள்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஓய்­வூ­திய வயதை 62லிருந்து 64ஆக உயர்த்­தும் சட்­டத்­தில் பிரெஞ்சு அதி­பர் இம்­மா­னு­வல் மெக்­ரோன் அண்­மை­யில் கையெ­ழுத்­திட்­டார். அச்­சட்­டத்­தைத் திரும்­பப் பெற­வேண்­டும் எனத் தொழிற்­சங்­கங்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

ஆனால், ஓய்­வூ­தி­யச் சீர்­தி­ருத்­தம் தேவை­யான ஒன்று என அதி­பர் மெக்­ரோன் கூறி வரு­கி­றார்.

கடந்த மாதம் 15ஆம் தேதி அச்­சீர்­தி­ருத்­தச் சட்­டத்­தில் அவர் கையெ­ழுத்­திட்­டார். இவ்­வாண்டு செப்­டம்­பர் மாத­வாக்­கில் அந்­தச் சட்­டம் நடப்­பிற்கு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதன் தொடர்­பில் மேலும் பேச்­சு­வார்த்தை நடத்த அர­சாங்­கம் முன்­வந்­துள்­ள­போ­தும் சட்­டத்­தைத் திரும்­பப் பெற வேண்­டும் என்­ப­தில் தொழிற்சங்கங்கள் விடாப்பிடியாக இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!