தொழில்நுட்பத்தின் துணையுடன் இளம் அதிகாரிகளுக்குப் பயிற்சி

இளம் உள்­து­றைக் குழு பயிற்­சிக் கழக அதி­கா­ரி­களுக்­குப் பயிற்­சி­ அளிக்க நகைப்பழி­கை­களும் (மீம்ஸ்) மெய்­நி­கர் தொழில்­நுட்­ப­மும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

அடுத்த தலைமுறை அதி­கா­ரி­க­ளுக்­கு உகந்த வகை­யில் இருக்­க­வும் அவர்கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான திறன்­களை நினை­விற்­கொண்டு, வளர்த்­துக்­கொள்ள உத­வ­வும் பயிற்­சி­யில் நகைப்­ப­ழி­கை­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

குடி­நு­ழை­வுச் சோதனை முறை தொடர்­பில் அதி­கா­ரி­களுக்­குப் பயிற்­சி­ய­ளிக்­கப் பயன்­ப­டுத்­தப்­படும் நகைப்­பழி­கை­களை ஒரு செய­லி­யின் துணை­யு­டன் வரு­ட­லாம். குடி­நு­ழை­வுச் சோத­னையை எப்­படி மேற்­கொள்­வது, சோத­னைச்­சா­வ­டி­களில் சந்­தே­கத்­திற்­கி­ட­மா­ன­வர்­க­ளைக் கண்­ட­றி­வது எப்­படி என்­பன பற்­றிய தக­வல்­களை அவை வழங்­கும்.

அமெ­ரிக்க நட்­சத்­தி­ரம் சில்­வெஸ்­டர் ஸ்டா­லோன் `ராம்போ' கதா­பாத்­தி­ரத்­தில் தம் இரு கட்­டை­வி­ரல்­க­ளை­யும் உயர்த்­திக் காட்­டும் பட­மும் அவற்­றில் ஒன்று.

உள்­து­றைக் குழு பயிற்­சிக் கழ­கத்­தின் நேற்­றைய பணித்­திட்­டக் கருத்­த­ரங்­கில் இவ்­வி­வ­ரங்­கள் வெளி­யி­டப்­பட்­டன.

இந்­நி­கழ்­வில் பங்­கேற்ற உள்­துறை இரண்­டாம் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, உள்­து­றைக் குழு­வின் மேம்­ப­டுத்­தப்­பட்ட கற்­றல் மேலாண்மை முறையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னர்.

கடந்த 2016ஆம் ஆண்­டில் முதன்­மு­றை­யாக அறி­மு­கம் கண்ட அம்­முறை, பயிற்சி, மதிப்­பீடு, சமூக ஒத்­து­ழைப்பு ஆகி­ய­வற்றை ஒரே தளத்­தில் ஒருங்­கி­ணைத்து, மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. செயற்கை நுண்­ண­றி­வுடன் கூடிய மதிப்­பீட்டு முறை பயன்­படுத்­தப்­படும்.

உள்­து­றைக் குழு­வின் 68,000க்கும் மேற்­பட்ட அதி­காரி­க­ளுக்­கான முதன்­மை­யான பயிற்­சித் தள­மாக அம்­மு­றையை மாற்ற திட்­ட­முள்­ளது.

உள்­து­றைக் குழு அதி­கா­ரி­கள் எதிர்­கா­லத்­திற்­குத் தயா­ராக உள்ளதை உறு­திப்­ப­டுத்­து­வ­தில் உள்­து­றைக் குழு பயிற்­சிக் கழ­கம் முக்­கி­யப் பங்­காற்­று­கிறது என்று தொடர்பு, தக­வல் அமைச்­ச­ரு­மான திருவாட்டி டியோ குறிப்­பிட்­டார்.

மெய்­நி­கர், மெய்­மி­கைத் தொழில்­நுட்­பங்­களும் பயிற்­சிக் கழ­கத்­தின் முக்­கி­யப் பயிற்­சிக் கரு­வி­க­ளாக இடம்­பெ­ற­வுள்­ளன. பயிற்­சி­யின்­போது அவை அதி­கா­ரி­க­ளின் கண்­ண­சை­வையும்­யும் எதிர்­வி­னை­க­ளையும் கண்­கா­ணிக்­கும் என்­ப­தால் அவர்­களுக்கு ஆழ்ந்த அனு­ப­வம் கிட்­டும் எனக் கூறப்­பட்­டது.

வெவ்­வேறு கற்­றல் முறை­களை­யும் தொழில்­நுட்­பங்­களை­யும் ஆராய்­வ­தில் பயிற்­சிக் கழ­கத்­தின் துணிந்து முயன்று பார்க்­கும் மனப்­பாங்கை அமைச்­சர் பாராட்­டி­னார்.

"பாது­காப்­புத் துறை கண்டு­வரும் மாற்­றங்­க­ளுக்­கேற்ப நாம் மாறிக்­கொள்­ள­வும் ஒரு­படி முன்னே இருக்­க­வும் இது உதவு­கிறது," என்று திரு­வாட்டி டியோ குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!