தப்பியது மறுபிழைப்பு: சூடானிலிருந்து மீட்கப்பட்டோர் நிம்மதி

வன்­மு­றை­யால் நெருக்­க­டிக்கு ஆளாகி இருக்­கும் சூடான் நாட்­டி­லி­ருந்து 500க்கும் மேற்­பட்ட இந்­திய நாட்­ட­வரை மீட்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் தொட­ரு­கின்­றன.

‘ஆப­ரே­ஷன் காவேரி’ என்­னும் சிறப்பு நட­வ­டிக்கை மூலம் இது­வரை 360 இந்­தி­யர்­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் ஒன்­பது பேர் தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள்.

சென்னை அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் நேற்­றுக் காலை வந்­தி­றங்­கிய அவர்­கள் பெருந்­து­ய­ரில் இருந்து தப்­பித்­ததை கண்­ணீ­ரால் வெளிப்­படுத்தி உணர்ச்­சி­வ­சப்­பட்­ட­னர்.

ஆப்­பி­ரிக்க நாடான சூடா­னில் அர­சி­யல் நெருக்­கடி ஏற்­பட்டு உள்­ளது. ராணு­வத்­துக்­கும் துணை ராணு­வத்­துக்­கும் இடையே மூண்­டுள்ள சண்­டை­யில் நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் கொல்­லப்­பட்­ட­னர். நாடு என்ன ஆகுமோ என்ற அச்­சத்­தில் அங்கு தங்கி உள்ள வெளி­நாட்­ட­வர்­களை மீட்க அந்­தந்த நாடு­கள் வேக­மா­கச் செயல்­பட்டு வரு­கின்­றன.

அதற்கு உத­வும் வித­மாக 72 மணி நேர சண்டை நிறுத்­தத்தை சூடான் ராணு­வம் அறி­வித்­தது.

இந்­திய அர­சாங்­கத்­தால் மீட்­கப்­பட்ட முதல் இந்­தி­யர் குழு நேற்று முன்­தி­னம் இரவு புது­டெல்லி வந்­தி­றங்­கி­யது.

அவர்­களில் பெரும்­பா­லா­னோர் பீகார் மற்­றும் உத்­த­ரப் பிர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்­கள். சூடா­னில் உள்ள உலோ­கத் தொழிற்­சா­லை­க­ளி­லும் ஓடு தயா­ரிக்­கும் தொழிற்­கூ­டங்­க­ளி­லும் வேலை செய்­த­வர்­கள் அவர்­கள்.

குஜ­ராத்­தை­யும் தமிழ்­நாட்­டை­யும் சேர்ந்த வர்த்­தர்­களும் மருத்­து­வர்­களும் மீட்­கப்­பட்­டோ­ரில் அடங்­கு­வர். ஜோதி அகர்­வால் என்­ப­வர் தமது கண­வர் மற்­றும் இரு பிள்­ளை­க­ளு­டன் டெல்­லி­யில் இறங்­கி­னார்.

தமது கண­வர் சூடா­னில் கணக்­காய்­வா­ள­ராக வேலை செய்­த­தா­கக் கூறிய அந்­தப் பெண், “நாங்­கள் உயிர் பிழைப்­போம் என்று நினைக்­க­வில்லை. எங்­க­ளுக்கு அருகே இரண்டு வீதி­களில் இருந்த வீடு­கள் அனைத்­தும் வெடி­குண்டு தாக்­கு­த­லில் தரை­மட்­ட­மா­கி­விட்­டன. நாங்­களும் உயி­ரி­ழந்து இருப்­போம்,” என்று அச்­சத்­து­டன் கூறி­னார்.

புது­டெல்லி வழி­யாக சென்னை வந்­தி­றங்­கி­ய­வர்­களில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த நால்­வ­ரின் சொந்த ஊர் திண்­டுக்­கல் மாவட்­டம் நிலக்­கோட்டை.

ஜோன்ஸ் திர­வி­யம், அவ­ரது மனைவி சீத்­ரூத் ஜெபா, இவ்­வி­ரு­வ­ரின் மகள்­கள் ஜென்னி ஜோன்ஸ், ஜோஸ்னா ஜோன்ஸ் ஆகிய அந்த நால்­வ­ரும் சொந்த ஊர் செல்ல விமா­னம் மூலம் மதுரை சென்­ற­னர். அங்கு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர்­கள், சூடான் நாட்டு மக்­கள் வன்­மு­றை­யால் பெரும் அவ­திக்கு ஆளாகி இருப்­ப­தா­கக் கூறி­னர்.

“3,000க்கும் மேற்­பட்ட இந்­தி­யர்­கள் வாழும் பகுதி கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்டு உள்­ளது. மின்­சா­ரம், குடி­நீர், இணை­யத் தொடர்பு என்று எந்த வச­தி­யும் இல்லை. வெடி­குண்டு சத்­தம் கேட்­டுக்­கொண்டே இருக்­கும். உயி­ருக்­குப் பயந்து 10 நாள்­க­ளுக்­கும் மேல் வீட்­டுக்­குள்­ளேயே முடங்­கி­னோம். வாட்ஸ்­அப் குழு ஒன்று புதி­தாக ஏற்­ப­டுத்தி அதன்­மூ­லம் தமி­ழர்­கள் இணைந்­தோம்,” என்று திரு ஜோன்ஸ் திர­வி­யம் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!