மீண்டும் முகக்கவசம்: மலேசியா யோசனை

புதிய வகை கொரோனா கிருமி பரவி வரு­வ­தால் பள்­ளிக்­கூ­டப் பிள்­ளை­கள் முகக்­க­வ­சம் அணி­வதை மீண்­டும் அறி­மு­கம் செய்­வது பற்றி மலே­சியா யோசித்து வரு­கிறது. எக்ஸ்­பிபி1.16 என்­னும் ஓமிக்­ரா­னின் புதிய நுண்­கி­ரு­மியை ‘ஆக்­ட­ரஸ்’ என்று சமூக ஊட­கங்­கள் குறிப்­பி­டு­கின்­றன.

கடந்த திங்­கட்­கி­ழமை நில­வ­ரப்­படி, மலே­சி­யா­வில் இதுவரை 12 பேருக்கு அந்­தப் புதிய கிருமி தொற்றி உள்­ளது. அதி­க­மாக சர­வாக்­கில் ஆறு பேருக்­கும் சிலாங்­கூ­ரில் நால்­வ­ருக்­கும் கோலா­லாம்­பூ­ரில் இரு­வ­ருக்­கும் ஆக்­ட­ரஸ் தொற்­றி­யது உறுதி செய்­யப்­பட்­டது.

புதிய வகைக் கிருமி மூலம் சமூ­கத்­திற்­குள் மீண்­டும் கொவிட்-19 தலை­தூக்­கு­வ­தைத் தடுக்­கும் பொருட்டு புதிய நட­வ­டிக்கை பற்றி ஆலோ­சித்து வரு­வ­தாக மலே­சிய சுகா­தார அமைச்­சர் ஸலிஹா முஸ்­தஃபா குறிப்­பிட்டு இருந்­தார்.

இது தொடர்­பான முடிவை எடுப்­ப­தற்கு முன்­னர் கல்வி அமைச்­சர் ஃபாத்லினா சிடேக்­கு­டன் விரை­வில் கலந்துபேச இருப்­ப­தாக டாக்­டர் ஸலிஹா தெரி­வித்து உள்­ளார்.

“இந்த வாரம் கல்வி அமைச்­ச­ரைச் சந்­திக்க உள்­ளேன். புதிய வகைக் கிரு­மிப் பர­வ­லால் பள்ளிக்­கூ­டங்­கள் பாதிக்­கப்­ப­டா­மல் இருக்க என்ன செய்­ய­லாம் என்­பது பற்றி அப்­போது இரு­வ­ரும் கலந்து பேசு­வோம்.

“அதன் அடிப்­ப­டை­யில் என்­னென்ன வழி­மு­றை­களை வகுக்­க­லாம் என்­பது பற்றி முடி­வெ­டுப்­போம்,” என்று டாக்­டர் ஸலிஹா கூறி­னார்.

மே 2ஆம் தேதி பள்­ளிக்­கூடங்­கள் மீண்­டும் திறக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னர் புதிய வழி­மு­றை­களும் செயல்­பாட்டு நடை­மு­றை­களும் வெளி­யி­டப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

“நோன்­புப் பெரு­நாள் விடு­முறை­யைக் கழிக்க பல இடங்­க­ளுக்­குச் செல்­லும் மாண­வர்­களுக்கு கிருமி தொற்­றி­னால் அது பள்­ளிக்­கூ­டங்­களில் பரவி கொவிட்-19 புதிய அலையை உரு­வாக்­கி­வி­டக்­கூ­டும்,” என்று மலே­சி­யா­வின் பெரித்தா ஹரி­யான் செய்­தித்­தா­ளி­டம் அவர் கூறி­னார்.

பின்­னர் அவர் ‘த ஸ்டார்’ இணை­யச் செய்­தி­யி­டம் பேசும்­போது, மீண்­டும் மாண­வர்­கள் முகக்­க­வ­சம் அணிய பரிந்­துரை செய்­யப்­படும் என்­றும் இருப்­பி­னும் அத­னைக் கட்­டா­ய­மாக்­கும் யோசனை எது­வும் இல்லை என்­றும் கூறி­னார்.

பள்­ளிக்­கூ­டப் பிள்­ளை­க­ளோடு பொது­மக்­களும் மீண்­டும் முகக்­க­வ­சம் அணிய வேண்­டிய நிலை ஏற்­ப­டுமா என்று கேட்­ட­தற்கு, வெகு விரை­வில் அப்­படி ஒரு நிலை ஏற்­ப­ட­லாம் என்று அமைச்­சர் பதி­ல­ளித்­தார்.

பொது­மக்­கள் முகக்­க­வ­சம் அணி­வ­தைத் தொடர வேண்­டும் என்று ஏற்­கெ­னவே அர­சாங்­கம் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­வ­தாக அப்­போது அவர் குறிப்­பிட்­டார்.

தேசிய ஆசி­ரி­யர் தொழிற்­சங்­கத்­தின் தலை­மைச் செய­லா­ளர் ஃபௌஸி சிங்­கோன் கூறு­கை­யில், “பள்­ளி­களில் முகக்­க­வ­சம் அணி­வது மீண்­டும் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டால் நடப்­பில் உள்ள விதி­களே அதற்­குப் போது­மா­ன­தாக இருக்­கும்,” என்­றார்.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி பெரும்­பா­லான பள்­ளிக்­கூ­டங்­களில் முகக்­க­வ­சம் இன்­னும் கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வில்லை என்­றார் அவர்.

பள்­ளிக்­கூட வளா­கங்­களில் முகக்­க­வ­சம் அணிவதை 2022 செப்­டம்­ப­ரில் மலே­சிய அர­சாங்­கம் தளர்த்­தி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!