காபூல் விமான நிலையத் தாக்குதலுக்கு காரணமான ஐஎஸ் தலைவர் கொலை

ஆப்­கா­னிஸ்­தான் தலை­ந­கர் காபூ­லில் உள்ள அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் 2021 ஆகஸ்ட்­டில் நடந்த வெடி­குண்டுத் தாக்­கு­த­லுக்­குக் கார­ண­மான ஐஎஸ்-கே அமைப்­பின் தலை­வர் ஒரு­வரை தலி­பான் படை­யி­னர் கொன்­று­விட்­ட­தாக வெள்ளை மாளிகை நேற்று தெரி­வித்­தது.

அந்­தத் தாக்­கு­த­லில் அமெ­ரிக்க ராணுவ வீரர்­கள் 13 பேரும் குடி­மக்­கள் கிட்­டத்­தட்ட 170 பேரும் கொல்­லப்­பட்­ட­னர்.

ஆப்­கா­னிஸ்­தா­னில் தலி­பான் நடத்­திய அதி­ரடி நட­வ­டிக்­கை­யில் அந்த ஐஎஸ் தலை­வர் கொல்­லப்­பட்­டது குறித்து ஏப்­ரல் தொடக்­கத்­தில் அமெ­ரிக்க உளவுத்­துறை நிபு­ணர்­க­ளுக்­குத் தெரியவந்­த­தாக அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் நால்­வர் கூறி­னர்.

காபூல் விமான நிலை­யத்­தில் நடந்த தாக்­கு­த­லுக்கு மூளை­யாகச் செயல்­பட்ட அந்த ஐஎஸ்-கே தலை­வ­ரின் அடை­யாளத்தை வெளி­யிட அமெ­ரிக்க அதி­காரிகள் மறுத்­து­விட்­ட­னர்.

அந்த ஐஎஸ் தலை­வ­ரைக் குறி­வைத்து தலி­பான் படை­யினர் தாக்­கு­தல் மேற்­கொண்­ட­னரா, தலி­பா­னுக்­கும் ஐஎஸ் போரா­ளி­க­ளுக்­கும் இடையே அதி­க­ரித்­து­வ­ரும் தாக்­கு­தல்­களில் அவர் கொல்­லப்­பட்­டாரா என்­பது பற்­றித் தெரி­ய­வில்லை என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

தலி­பான் நடத்­திய தாக்­கு­தலை, இவ்­வாண்டு ஐஎஸ்-கே பிரி­வுக்கு ஏற்­பட்ட மற்­றொரு பெரிய அள­வி­லான தலை­மைத்­துவ இழப்பு என்று தேசிய பாது­காப்பு மன்­றத்­தின் பேச்­சா­ளர் திரு ஜான் கிர்பி வர்­ணித்­தார்.

ரக­சிய உளவு அறிக்­கை­களின்­படி, அந்த ஐஎஸ்-கே தலை­வர் கொல்­லப்­பட்­ட­தாக உள­வுத்­துறை நிபு­ணர்­கள் உறுதி­யு­டன் இருப்­ப­தாக அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் கூறி­னர்.

ஆனால், அந்த முடி­வுக்­கான ஆதா­ரங்­க­ளையோ அந்த ஐஎஸ்-கே தலை­வ­ரின் மர­ணம் பற்றிய மேல்­வி­வ­ரங்­களை அதி­கா­ரி­கள் வழங்­க­வில்லை.

காபூல் விமான நிலை­யத் தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்த அமெ­ரிக்க ராணுவ வீரர்­க­ளின் குடும்­பத்­தாரை நேற்று முன்­தி­னம் அழைக்­கத் தொடங்­கிய அமெ­ரிக்க அதி­கா­ரி­கள், தலி­பான் பாது­காப்­புப் படை­யி­னர் நடத்­திய தாக்­கு­த­லில் அந்த ஐஎஸ்-கே தலை­வர் கொல்­லப்­பட்­டு­விட்­ட­தாக அவர்­க­ளி­டம் தெரி­வித்­தது.

ஆனால், அந்­த ஐஎஸ்-கே தலை­வ­ரின் விவ­ரங்­களை அவர்­க­ளி­டம் பகிர அதி­கா­ரி­கள் மறுத்­து­விட்­ட­னர்.

“அவ­ரது பெயரை அவர்­கள் என்­னி­டம் தெரி­விக்­க­வில்லை. தலி­பான் படை­யி­ன­ரின் நடவடிக்கை குறித்து மேல்­வி­வ­ரங்­களை அவர்­கள் என்­னி­டம் சொல்­ல­வில்லை,” என்று காபூல் விமான நிலை­யத் தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்ட ஸ்டாஃப் சார்­ஜண்ட் டெய்­லர் ஹூவ­ரின் தந்தை திரு டேரின் ஹூவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!