வெடிகுண்டுத் தாக்குதலில் இந்தியக் காவல்துறையினர் 10 பேர் கொல்லப்பட்டனர்

இந்­தி­யா­வின் சத்­தீஸ்­கர் மாநி­லம், பஸ்­கர் மாவட்­டத்­தில் நேற்று அதிநவீன வெடி­பொ­ருள் வெடித்து சிறிய வேன் ஒன்று தகர்க்­கப்­பட்­ட­தில் அதி­லி­ருந்த காவல்­து­றை­யி­னர் பத்­துப் பேரும் வேன் ஓட்­டு­ந­ரும் கொல்­லப்­பட்­ட­னர்.

உள­வுத்­துறை அளித்த தக­வ­லின்­படி, மாவோ­யிஸ்­டு­க­ளுக்கு எதி­ரான திடீர் நட­வ­டிக்­கையை முடித்­துக்­கொண்டு காவல்­து­றை­யி­னர் வேனில் திரும்­பிக்­கொண்டு இருந்­த­போது வெடி­குண்­டுத் தாக்­கு­தல் நடந்­த­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

பாது­காப்­புப் படை­யி­னரை தாங்­கள் தாக்­கப்போவ­தாக மாவோ­யிஸ்­டு­கள் கடந்த வாரம் கடி­தம் மூலம் மிரட்­டல் விடுத்து இருந்­த­னர்.

உயி­ரி­ழந்த அந்­தக் காவல்­துறை­யி­னர், சத்­தீஸ்­கர் காவல்­துறை­யின் சிறப்­புப் பிரி­வான மாவட்ட பாது­காப்­புப் படையை (டிஆர்ஜி) சேர்ந்­த­வர்­கள். மாவோ­யிஸ்­டு­களை எதிர்­கொள்­வ­தற்­கான பயிற்­சியை அவர்­கள் பெற்றி­ருந்­த­னர்.

இட­து­சாரி பயங்­க­ர­வா­தத்­திற்குத் தள­மா­கத் திக­ழும் பஸ்தர் மாவட்­டத்­தில் கிளர்ச்­சி­யா­ளர்­களுக்கு எதி­ராக பல்­வேறு தாக்குதல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு வெற்றி­க­ர­மாக அமைந்­த­தற்கு டிஆர்ஜி படை முக்­கியப் பங்காற்றி வரு­கிறது.

இந்­நி­லை­யில், இந்­தி­யப் பிரதமர் நரேந்­திர மோடி இந்தத் ­தாக்கு­த­லுக்­குக் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார். இறந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு தமது அனு­தா­பங்­களை அவர் தெரி­வித்­துக்­கொண்­டார்.

வெடி­குண்­டுத் தாக்­கு­த­லைத் தொடர்ந்து, சத்­தீஸ்­கர் முத­ல­மைச்­சர் பூபேஷ் பாகலை தொடர்பு­கொண்டு பேசிய இந்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, சாத்­தி­ய­முள்ள அனைத்து உத­வி­யும் வழங்க உத்­த­ர­வா­தம் அளித்­தார்.

“டிஆர்ஜி படை­யைக் குறி­வைத்து நடத்­தப்­பட்ட ‘ஐஇடி’ வெடி­குண்­டுத் தாக்­கு­த­லில் காவல்­து­றை­யி­ன­ரும் வேன் ஓட்டு­ந­ரும் கொல்­லப்­பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்­கிறது. அவர்­க­ளின் குடும்­பத்­தார் அனு­பவிக்­கும் துயரை நாங்­களும் பகிர்­கி­றோம். இறந்­த­வர்­க­ளின் ஆத்மா சாந்­தி­ய­டை­யட்­டும்,” என்று திரு பாகல் டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

நக்­ச­லைட்­டு­கள் என்­றும் அழைக்­கப்­படும் ஆயு­த­மேந்­திய மாவோ­யிஸ்­டு­கள், அர­சாங்­கத்தை எதிர்த்­துக் கிளர்ந்­தெ­ழுந்­துள்­ள­னர்.

கடந்த 60 ஆண்­டு­களாக இரு­த­ரப்­பி­ன­ருக்­கும் இடையே நில­வி­வ­ரும் மோதல்­களில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் கொல்­லப்­பட்­டு­விட்­ட­னர்.

சமு­தா­யத்­தில் பின்­தங்­கி­யுள்ள ஏழை எளி­ய­வர்­க­ளின் சார்­பாக தாங்­கள் சண்­டை­யிட்டு வரு­வதாக மாவோ­யிஸ்­டு­கள் கூறு­கின்­ற­னர்.

1967லிருந்து உள்­நாட்­டுப் பாது­காப்­புக்கு மாவோ­யிஸ்­டு­கள் பெரும் அச்­சு­றுத்­த­லாக விளங்­கு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!