லீ குவான் இயூ விருது: சாதித்தார் சதீஷ்குமார்

கரு­ணா­நிதி துர்கா

தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் இந்த ஆண்டு உச்­ச­தேர்ச்சி பெற்று, லீ குவான் இயூ விருது வென்ற நான்கு மாண­வர்­களில் 20 வயது சதீஷ் குமார் கண்­ண­னும் (படம்) ஒரு­வர். பல­து­றைத் தொழிற்கல்­லூரி­யில் தொழில்­நுட்­பம், கணினி அறி­வி­யல் துறை­களில் தலை­சி­றந்த தேர்ச்சி பெறும் மாண­வர்­க­ளுக்கு லீ குவான் இயூ கணி­தம், அறி­வி­யல் விருது வழங்­கப்­ப­டு­கிறது.

பல­து­றைக்கல்­லூரி பட்­ட­யப் படிப்­பில் ஒரு­வர் பெறக்­கூ­டிய அதி­க­பட்­ச­மான நான்கு புள்­ளி­களை (ஜிபிஏ) பெற்­று இருக்­கும் சதீஷ், சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப வடி­வ­மைப்­புப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஐந்து ஆண்டு முது­நிலைப் பட்டம் பயிலவுள்ளார்.

லீ குவான் இயூ வி­ருது சதீ­ஷின் பெருங்­க­னவு. ஈராண்­டுக்கு முன்­பிருந்தே அதற்குக் குறிவைத்துக் கடு­மை­யாக உழைத்­தார் இவர்.

சிறுவயதில் குடும்­பப் பிரச்­சி­னை­யால் படிப்பு பாதிக்­கப்­பட, தொடக்­கப்­பள்ளி இறுதித் தேர்­வில் மதிப்­பெண் குறைந்து வழக்­க­நி­லைக்­குச் சென்­றார் சதீஷ். அப்­போது அவ­ரின் அம்மா அவ­ரி­டம் வீட்டுச் சூழ­லை­யும் படிப்­பை­யும் பிரித்துப் பார்க்­கும்­படி கூறி­னார்; அவர் படிப்­ப­தற்கு வீட்­டில் அமை­தி­யான சூழலையும் ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தார்.

வழக்­க­நி­லைத் தேர்­வில் சிறந்த தேர்ச்சி பெற்று, பல­து­றைத் தொழில் கல்­லூ­ரி­யில் பொறி­யி­யல் படிப்­பில் சேர்ந்­தார் சதீஷ்.

அச்சமயத்தில் அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட, குடும்பப் பொறுப்புகளையும் சதீஷ் ஏற்கும் நிலை வந்தது.

கடின உழைப்­பா­லும் சிறப்­பான தேர்ச்­சி­யி­னா­லும் கிடைத்த தெமா­செக் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் உப­கா­ரச் சம்­ப­ளம் இவ­ரது படிப்­புச் செல­வுக்­குப் பெரி­தும் கைகொ­டுத்­தது.

தன்­னைப்­போல் பிரச்­சி­னை­ உள்ள, வச­தி­கு­றைந்­தோருக்கு உத­வும் நோக்­கத்­தில பொதுச் சேவை­யி­லும் சதீஷ் ஈடு­ப­டத் தொடங்­கி­னார். ‘ஹாவ் ரென் ஹாவ் ஷி’ என்ற லாப நோக்­க­மில்லா அமைப்­பு­டன் சேர்ந்து இவர் தொண்­டூ­ழி­யம் புரிந்து வரு­கி­றார்.

தனது வெற்­றிக்கு தன் அம்­மாவே கார­ணம் என்ற சதீஷ், “எத்­தனை சிக்­கல்­க­ளைச் சந்­தித்­தா­லும் அதை அவர் என்­னி­டம் காட்­டிக்­கொண்­ட­தில்லை. அவரே எனக்கு உறுதுணை,” என்­றார்.

ரொபோட்டிக்ஸ் துறையில் சாதிக்க வேண்டும் என்று இலக்கு கொண்டுள்ள சதீஷ். எலும்பு அசைவுக்குத் துணை புரியும் கருவி குறித்த ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளவுள்ளார்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!