இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க ‘ஆப்பிள்’ கடப்பாடு

‘ஆப்­பிள்’ நிறு­வ­னம், இந்­தி­யா­வில் அதன் முத­லிரு கடை­க­ளைத் திறந்­து­வைக்க இந்த வாரம் இந்தியா சென்­றுள்ள அதன் தலைமை நிர்­வாகி டிம் குக், தலை­ந­கர் புது­டெல்­லி­யில் பிர­த­மர் நரேந்­திர மோடியை நேற்று முன்­தி­னம் சந்­தித்­தார்.

வேக­மாக வளர்ந்­து­வ­ரும் இந்­தி­யப் பொரு­ளி­ய­லில் மேலும் முத­லீடு செய்ய அவர் உறு­தி­ அளித்­துள்­ளார்.

திரு மோடி­யு­ட­னான சந்­திப்­புக்­குப் பிறகு டுவிட்­ட­ரில் பதி­விட்ட திரு குக், “கல்வி, மேம்­பாட்­டா­ளர்­கள் முதல் உற்­பத்­தி­யா­ளர்­கள், சுற்­றுப்புறம் வரை இந்தியா­வில் பல கடை­க­ளைத் திறந்து, முத­லீடு செய்ய நாங்­கள் கடப்­பாடு கொண்­டுள்­ளோம்,” என்­றார்.

டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள திரு மோடி, “பல­த­ரப்­பட்ட அம்­சங்­கள் குறித்து நாங்­கள் கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொண்­டோம். குறிப்­பாக, இந்­தி­யா­வில் இடம்­பெற்று வரும் தொழில்­நுட்ப உரு­மாற்­றம் குறித்து கலந்­தா­லோ­சித்­தோம்,” என்­றார்.

இந்த வாரம் மும்­பை­யில் ஆப்பி­ளின் முதல் கடை­யைத் திறந்து­வைத்த திரு குக், புது­டெல்­லி­யில் இரண்­டா­வது கடை திறப்பு நிகழ்ச்­சி­யில் நேற்று கலந்து­கொண்­டார்.

வாடிக்­கை­யா­ளர்­களை வர­வேற்று அவர்­க­ளு­ட­னும் ஊழி­யர்­க­ளு­ட­னும் திரு குக் செல்ஃபி படம் எடுத்­துக்­கொண்­டார்.

தக­வல் தொழில்­நுட்­பத்­துறை அமைச்­சர் அஷ்­வினி வைஷ்­ணவ் உள்­ளிட்ட இதர அதி­கா­ரி­க­ளை­யும் திரு குக் சந்­தித்­தார்.

இந்­தி­யா­வில் உற்­பத்­தித்­துறை, மின்­ன­ணு­வி­யல் ஏற்­று­மதி, நீடித்த நிலைத்­தன்மை, மக­ளிர் வேலை­வாய்ப்பு போன்ற வெவ்­வேறு அம்­சங்­களில் ஆப்­பி­ளின் ஈடு­பாட்டை அதி­க­ரிப்­பது குறித்து தாங்­கள் கலந்­தா­லோ­சித்­த­தாக திரு வைஷ்­ணவ் கூறி­னார்.

தக­வல் தொழில்­நுட்­பத்­துறை துணை அமைச்­சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர், இந்­தி­யா­வில் ஆப்­பிள் அதன் செயல்­பா­டு­களை விரி­வு­படுத்­து­வது குறித்து தாம் நன்­னம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தா­கச் சொன்­னார்.

“ஆப்­பிள்-இந்­தியா பங்­கா­ளித்­துவ முயற்­சி­யின் பல­னாக முதலீடு­கள், வளர்ச்சி, ஏற்­று­ம­தி­கள், வேலை­வாய்ப்­பு­கள் வரும் ஆண்டு­களில் இரு­ம­டங்கு, மும்­ம­டங்­காக பெரு­கும் என்ற நம்­பிக்கை எனக்கு உள்­ளது,” என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஆப்­பிள் நிறு­வ­னத்­தின் கவ­னம் இந்­தி­யா­வின் பக்­கம் திரும்­பு­வதை திரு குக்­கின் வருகை குறிக்­கிறது. பய­னீட்­டா­ளர் சந்­தை­யா­க­வும் உற்­பத்தி மைய­மா­க­வும் இந்­தி­யா­வி­டம் இருக்­கும் ஆற்­றல்­மீது ஆப்­பிள் கவ­னம் செலுத்தி வரு­வ­தாக கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

சீனா­வுக்கு அடுத்­த­தாக உல­கின் இரண்­டா­வது பெரிய திறன்­பே­சிச் சந்­தை­யில் தனது செயல்­பா­டு­களை விரி­வு­ப­டுத்­தும் ஆப்பிள் நிறு­வ­னம், மும்­பை­யி­லும் புது­டெல்­லி­யி­லும் கடை­க­ளைத் திறந்­தி­ருப்­பது புதிய மைல்­கல்லைக் குறிப்­ப­தாக அவர்­கள் கருது­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!