உதவி பெற்றபோது அசம்பாவிதம்: கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மரணம்

முஸ்­லிம்­க­ளின் புனித ரம­லான் மாதத்­தில் ரொக்க நன்­கொ­டை­க­ளைப் பெற்­றுக்­கொள்ள ஏமன் தலை­ந­கர் சனா­வில் பள்ளி ஒன்­றில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் திரண்­ட­தால் ஏற்­பட்ட கூட்ட நெரி­ச­லில் சிக்கி குறைந்தது 78 பேர் இறந்­து­விட்ட­னர்.

இந்த நன்­கொ­டைத் திட்­டத்­தின்­கீழ் 5,000 ஏமன் ரியால் (S$26) பெற்­றுக்­கொள்ள நூற்­றுக்­க­ணக்­கா­னோர் திரண்­ட­தாக சம்­ப­வத்தை நேரில் கண்ட இரு­வர் நேற்று கூறி­னர்.

“பள்­ளிக் கதவு திறந்த உட­னேயே, கூட்­டத்­தி­னர் ஒரு­வர் மற்­றொ­ரு­வரை முந்­திக்­கொண்டு ஓடி­னர். நுழை­வா­யி­லில் உள்ள படிக்­கட்­டு­களில் தடுக்கி சிலர் விழுந்­து­விட்­ட­னர்,” என்று மருத்­துவ உத­வி­யா­ளர் ஒரு­வர் சொன்­னார்.

இச்­சம்­ப­வத்­தில் 77 பேர் காய­முற்­ற­தாக ஹவ்தி சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. அவர்­களில் 13 பேர் கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், அந்த நன்­கொடை திட்­டத்­துக்கு ஏற்­பாடு செய்த இரு வணி­கர்­கள் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­தா­க­வும் இச்­சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

போர் சூழ்ந்த ஏம­னில், மக்கள்­தொ­கை­யில் மூன்­றில் இரு பங்­கி­ன­ருக்கு உதவி தேவைப்­படு­வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!