மூப்படைதல் விவகாரங்களை எதிர்கொள்ள திட்டங்கள்

2026ல் ‘நன்கு மூப்படைந்த’ நாடு என்ற நிலையை எட்டவிருக்கும் சிங்கப்பூர்

சமூ­கத்­தில் மூத்­தோர் மூப்­படைய­வும் அவர்­கள் தொடர்ந்து ஆரோக்­கி­ய­மாக இருப்­ப­தற்­கும் உத­வு­வ­தில் இருந்து ஓய்­வுக்­காலத்­திற்கு அவர்­க­ளி­டம் போது­மா­ன சேமிப்பு இருப்­பதை உறுதி­செய்­வது வரை, நன்கு மூப்­ப­டைந்த சமு­தா­யத்­திற்கு சிங்­கப்­பூர் தயா­ராகி வரு­வ­தா­க­வும் அவ்­வாறு அது தொடர்ந்து செய்­யும் என்­றும் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­ இருக்­கி­றார்.

அதி­ப­ரின் உரை மீதான விவா­தத்­தின்­போது நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய அவர், மூப்­ப­டை­வதே இந்­தத் தலை­மு­றைக்­கான ஆகப் பெரிய சமு­தாய உரு­மாற்­றம் என்­றார்.

‘மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி’ எனப்­படும் வரு­முன் காக்­கும் திட்­டத்தை சிங்­கப்­பூர் ஏற்­கெ­னவே அறி­வித்­து­விட்­டது. அதன்­படி, தங்­கள் ஆரோக்­கியத்­தைப் பேணிக் காக்க பொதுநல மருத்­து­வ­ரு­டன் சேர்ந்து செயல்­பட தனி­ந­பர்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர். வரும் ஜூலை­யில் இத்­திட்­டம் தொடங்­கப்­ப­ட­வுள்­ளது.

சுகா­தா­ரத் திட்­டங்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், அவை மருத்­துவ ரீதி­யி­லாக இருப்­ப­தை­விட சமு­தாய ரீதி­யி­லாக இருப்­ப­தாக திரு ஓங் கூறி­னார்.

ஆரோக்­கி­ய­மான உணவு வகை­களை உண்­பது, சுகா­தா­ரப் பரி­சோ­த­னை­க­ளுக்­குச் செல்­வது போன்ற முயற்­சி­களை சிலர் சரி­வர மேற்­கொள்­ளா­மல் இருக்­க­லாம். எனி­னும், சமூக ஆத­ர­வால் இதை எதிர்­கொள்ள முடி­யும்.

“பெரிய மாற்­றங்­கள் இடம்­பெற வேண்­டிய அடுத்த அம்­சம் இது. மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி திட்­டத்­துக்கு அப்­பாற்­பட்டு, சமூ­கப் பரா­ம­ரிப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் நமது சுகா­தா­ரத்­திற்கு எது சரியோ அதைச் செய்­வ­தற்­கும் மூப்­ப­டை­வ­தற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்­கும் சுகா­தார அமைச்சு முன்­னு­ரிமை அளிக்­கும்,” என்று திரு ஓங் விவ­ரித்­தார்.

மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி திட்­டத்­தின் தொடர்ச்­சி­யாக இருக்­கும் இத்­திட்­டம், அதே அள­வுக்கு விரி­வாக இருக்­கும் என்­றார் அவர்.

2017ல் ‘மூப்­ப­டைந்த’ நாடு என்ற நிலையை சிங்­கப்­பூர் எட்­டி­யது. 2026ல் ‘நன்கு மூப்­படைந்த’ நாடு என்ற நிலையை அது எட்­ட­வி­ருக்­கிறது. 2030க்குள் நான்­கில் ஒரு­வர் 65 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வயது உடை­ய­வர்­க­ளாக இருப்­பர். தற்­போது இந்த விகி­தம் ஆறில் ஒன்­றாக உள்­ளது.

மக்­கள்­தொகை மூப்­ப­டை­வதை முன்­னிட்டு அதற்­கான திட்­ட­மி­டு­தல் பல்­லாண்டு கால­மாக நடை­பெற்று வரு­கிறது. ஓய்­வுக்­கால வய­தி­லும் மத்­திய சேம நிதி முறை­யி­லும் மாற்­றங்­கள் செய்­வது குறித்த யோசனை ஏறக்­கு­றைய 40 ஆண்­டு­களுக்கு முன்­னரே தொடங்­கி­விட்­ட­தாக திரு ஓங் குறிப்­பிட்­டார்.

கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­களுக்கு முன்பு, மூப்­ப­டை­தல் பிரச்சினைகள் தொடர்பான குழுவை அர­சாங்­கம் அமைத்­தது. மூப்­படை­த­லுக்­கான அமைச்­சர்­நிலைக் குழு­வாக 2007ல் அது முறைப்­படுத்­தப்­பட்­டது.

மூப்­ப­டைந்­து­வ­ரும் மக்­கள்­தொ­கைக்கு ஏற்­ற­வாறு சிங்­கப்­பூர் அதன் பொரு­ளி­யலை மாற்றி­ய­மைக்க வேண்­டும். அதன் பொருட்டு, ஓய்­வுக்­கால, மறு­வேலை நிய­மன வயது படிப்­ப­டி­யாக உயர்­தப்­பட்டு வரு­கிறது. 2030க்குள் இது முறையே 65 மற்­றும் 70ஆக உயர்த்­தப்­படும்.

ஓய்­வுக்­கால, மறு­வேலை நிய­மன வயதை உயர்த்­து­வ­தால், வயது கார­ண­மாக பணி­நீக்­கம் செய்­யப்­ப­டு­வ­தில் இருந்து வய­தான ஊழி­யர்­க­ள் பாது­காக்­கப்­ப­டு­வ­தாக திரு ஓங் சொன்­னார்.

அதே­வே­ளை­யில், சிங்­கப்­பூரர்­க­ளி­டம் ஓய்­வுக்­கா­லத்­தில் போது­மா­ன சேமிப்பு இருப்­பதை உறுதி­செய்­யும் அம்­சம் தொடர்ந்து மேம்­ப­டுத்­தப்­படும்.

“நக­ரத் திட்­ட­மி­டு­தல், பொரு­ளி­யல் வளர்ச்சி, ஓய்­வுக்­கா­லத்­தில் போது­மா­ன சேமிப்பு இருப்பது அல்­லது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு சீர்­தி­ருத்­தங்­கள் உள்­ளிட்ட அம்­சங்­களில் மூப்­ப­டை­த­லுக்­குத் திட்­ட­மி­டு­வ­தற்கு முன்­கூட்­டியே கொள்­கை­களை வகுக்க வேண்­டி­யது அவ­சி­யம். அதுவே சிங்கப்­பூர் அர­சாங்­கத்­தின் சிறப்பம்சம்,” என்­றார் திரு ஓங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!