மக்கள்தொகை 1,428.6 மி.; இன்னும் இரு மாதங்களில் சீனாவை விஞ்சி இந்தியா முதலிடம்

இந்­தியா இன்­னும் ஓரிரு மாதங்­களில் மக்­கள்­தொ­கை­யில் சீனாவை விஞ்­சி­விடும். இந்த ஆண்­டின் நடுப்­ப­குதி வாக்கில் சீனா­வை­விட இந்­தி­யா­வில் கிட்­டத்­தட்ட 3 மில்­லி­யன் அதிக மக்­கள் வாழ்­வார்­கள் என்று ஐநா நிறு­வ­னம் வெளி­யிட்டு இருக்­கும் புள்­ளி­வி­வர அறிக்கை தெரி­வித்து இருக்­கிறது.

ஐநா மக்­கள்­தொகை நிதி­யம் அமைப்பு தன்­னு­டைய உலக மக்­கள் தொகை அறிக்கை 2023ஐ வெளி­யிட்டு இருக்­கிறது.

அதன்­படி இந்­தி­யா­வில் இன்­னும் சில மாதங்­களில் 1,428.6 மில்­லி­யன் அல்­லது 1.4286 பில்­லி­யன் (142.86 கோடி) மக்­கள் வசிப்­பார்­கள். சீன மக்­கள்தொகை 1.4257 பில்­லி­ய­னாக இருக்­கும் என்று அந்த அறிக்கை தெரி­வித்து இருக்­கிறது.

மக்­கள்தொகை­யைப் பொறுத்­த­வரை அமெ­ரிக்கா மூன்­றா­வது இடத்­தில் இருக்கும். அந்த நாட்­டில் 340 மில்லியன் பேர் வாழ்­வார்­கள் என்­பது கடந்த பிப்ரவரி மாதம் கிடைத்த தகவல்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு கணிக்­கப்­பட்டு இருக்­கிறது.

இந்­தியா இந்த மாதம் சீனாவை கடந்­து­வி­டும் என்று ஏற்­கெ­னவே ஐநா மதிப்­பீ­டு­கள் தெரி­வித்து இருக்­கின்­றன.

இருந்­தா­லும் அந்த மாற்­றம் எந்­தத் தேதி­யில் இடம்­பெ­றும் என்­பதை இப்­போதைய ஆகப் புதிய அறிக்கை தெரி­யப்­படுத்­த­வில்லை.

இந்­தியா, சீனா இரு நாடு­களில் இருந்­து வெளி­வ­ரும் புள்­ளி­வி­வ­ரங்­கள் நிச்­ச­ய­மில்­லா­மல் இருப்­ப­தால் ஒரு குறிப்­பிட்ட தேதியை வரை­ய­றுத்­துச் சொல்­வது சாத்­தி­ய­மற்­றது என்று ஐநா மக்­கள் தொகை பிரிவு அதி­கா­ரி­கள் தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

இந்­தி­யா­வில் கடை­சி­யாக 2011ஆம் ஆண்டு மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. 10 ஆண்டு கழித்து 2021ஆம் ஆண்டு அடுத்த மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு நடந்­தி­ருக்க வேண்­டும். ஆனால் கொரோனா கார­ண­மாக அது தாம­த­ம­டைந்து இருக்­கிறது.

உல­கில் மொத்­தம் 8.045 பில்­லி­யன் மக்­கள் வாழ்கிறார்கள். அவர்­களில் மூன்றில் ஒரு பங்­கி­னர் சீனா­வி­லும் இந்­தி­யா­வி­லும் வசிப்­பார்­கள்.

என்­றா­லும் சீனா­வி­லும் இந்­தி­யா­வி­லும் மக்­கள்­தொகை வளர்ச்சி மெது­வ­டைந்து வரு­கிறது. இந்­தி­யா­வை­விட சீனா­வில் அந்த வளர்ச்சி குறை­வாக இருக்­கிறது.

சீனா­வில் 60 ஆண்டு காலத்­தில் முதன்­மு­த­லாக 2022ல் மக்­கள் தொகை குறைந்­தது. இந்த வர­லாற்று முக்­கி­ய­மான திருப்­பம் நீண்­ட­கா­லத்­திற்­குத் தொட­ரும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வின் வரு­டாந்­திர மக்­கள் தொகைப் பெருக்­கம் 2011 முதல் சரா­ச­ரி­யாக 1.2% ஆக இருந்து வரு­கிறது.

இந்த விகி­தாச்­சா­ரம் முந்­தைய 10 ஆண்­டில் 1.7% ஆக இருந்­தது என்று இந்­திய அர­சாங்க புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறின. இதை வைத்துப் பார்க்கையில் மக்கள்தொகைப் பெருக்கம் இந்தியாவில் முந்தைய அளவுக்கு அதிகமாக இல்லை என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!