ஐக்கியமாக நற்பெயரைக் காப்போம்

நீண்டகாலமாக சிங்கப்பூர் பார்த்திராத நடப்பு உலகச் சூழலில் ஐக்கியம் மிக முக்கியம் என்கிறார் பிரதமர்

சிங்­கப்­பூ­ரர்­கள் தொடர்ந்து ஐக்­கி­ய­மாக இருந்து வர­வேண்­டும். சாதனை எழுச்­சியை அவர்­கள் நிலை­நாட்டி வர­வேண்டும். உல­கில் சிங்­கப்­பூர் பெற்­றிருக்கும் நற்­பெ­யரை அவர்­கள் கட்டிக்­காக்க வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யுறுத்­திக் கூறி இருக்­கி­றார்.

சிங்­கப்­பூர் நீண்ட நெடு நாள்­க­ளாக அனு­ப­வித்­தி­ராத ஆபத்­து­மிக்க உல­கச் சூழலை இப்­போது எதிர்­நோக்­கு­கிறது. இப்­ப­டிப்­பட்ட ஒரு சூழ­லில் நாடு தொடர்ந்து ஐக்­கி­ய­மாக இருந்து வர­வேண்­டி­யது மிக முக்­கி­ய­மானது என்று அவர் வலி­யுறுத்திக் கூறி­னார்.

சிங்­கப்­பூர் பிள­வு­பட தன்னை அனு­ம­தித்­து­வி­டக் கூடாது. அதிக மக்­கள்­தொகை கொண்ட, உள்­நாட்­டுச் சந்­தை­யைக் கொண்ட இதர நாடு­களைப் போல உள்­நோக்­கிய கண்­ணோட்­ட­மும் சிங்­கப்­பூருக்கு ஒத்­து­வ­ராது என்று பிர­த­மர் தெரி­வித்­தார்.

திரு லீ, நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் 50 நிமி­டம் உரை­யாற்­றி­னார். பொரு­ளி­யல் ரீதி­யி­லும் உத்­தி­பூர்வ முறை­யி­லும் சிங்­கப்­பூர் எதிர்­நோக்­கும் சவால்­க­ளை­யும் அவற்­றால் சிங்­கப்­பூ­ருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கங்­களை பற்­றி­யும் திரு லீ விவ­ரித்­தார்.

“இந்­தோ­னீ­சியா, மலே­சியா போன்ற பக்­கத்து நாடு­க­ளுடன்­ கூ­டிய சிங்­கப்­பூ­ரின் உறவு அணுக்­க­மா­ன­தாக, நிலை­யா­ன­தாக, ஊக்­க­மூட்­டு­வ­தாக இருக்­கிறது.

“என்­றா­லும் அதற்கு அப்­பாற்­பட்ட சூழ்­நி­லை­யைக் கவ­னிக்­கும்­போது அது பிரச்­சினை மிகுந்­த­தாக, ஆபத்­தா­ன­தாக இருக்­கிறது,” என்று திரு லீ எச்­ச­ரித்­தார்.

“புறச்­சூ­ழ­லின் ஈர்ப்பு விசையை சிங்­கப்­பூ­ரர்­கள் உணர்ந்­து­கொள்ள வேண்­டும். சிங்­கப்­பூர் ஒரு புயலை அல்ல, பல புயல்­களை எதிர்­நோக்கி வரு­கிறது,” என்று அதி­பர் உரை மீதான மூன்­றா­வது நாள் விவா­தத்­தின்­போது திரு லீ குறிப்­பிட்­டார்.

உக்­ரேன்-ரஷ்யா போர், அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் அதி­க­ரித்து வரும் விரோதப் போக்கு, பல­த­ரப்பு வர்த்தக முறை­யைக் கீழ­றுக்கும் தன்­னைப்­பே­ணித்­த­னம் அதி­கரிப்­பது ஆகி­யவை அந்­தப் புயல்­கள் என்றார் திரு லீ.

“கடந்த 60 ஆண்டு கால­மாக சிங்­கப்­பூ­ரர்­கள் ஒன்­றா­கச் சேர்ந்து பாடு­பட்டுள்ளனர்.

“ஒரு­வர் மீது மற்­றொ­ரு­வர் நம்­பிக்­கை கொண்டு, பாத­கங்­க­ளைச் சாத­கங்­க­ளாக்கி பல சவால்­க­ளைச் சந்­தித்து இருக்­கிறார்­கள்,” என்று கூறிய பிர­த­மர் லீ, தொடர்ந்து சிங்­கப்­பூ­ரர்­கள் ஒற்­று­மை­யைக் கட்­டிக்­காக்க வேண்­டும் என்றார்.

“பிரச்­சி­னை­க­ளு­டன்­கூ­டிய புறச் சூழல்­கள் புதிய உளைச்­சல்­களை உரு­வாக்­கும். சமூ­கத்­தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். அவை சிங்­கப்­பூ­ரர்­களைப் பிளவு­ப­டுத்­தி­விட நாம் அனுமதித்­து­விடக்கூடாது,” என்று திரு லீ வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

“போர் கார­ண­மாக உரு­வாகி இருக்­கும் உயர் பண­வீக்­கம் பல குடும்­பங்­க­ளுக்­குச் சிர­மத்தை உண்­டு­பண்­ணும். குறிப்­பாக குறைந்த, நடுத்­தர வரு­மான குடும்­பங்­கள் பாதிக்­கப்­படும்.

“சீனா­வுக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடை­யி­லான பதற்­றம் கார­ண­மாக உணர்வு ரீதி­யில் மக்­கள் அங்­கு­மிங்­கும் இழுக்­கப்­ப­ட­லாம். வர்த்­தக நெருக்­க­டி­கள் ஏற்­படும். ஆதிக்க இயக்­கங்­கள் இடம்­பெ­ற­லாம்,” என்று பிர­த­மர் எச்­ச­ரித்­தார்.

“வளர்ச்சி நிச்­ச­ய­மில்­லா­மல் போகும். உலக வர்த்­தக முறை சிதை­வ­தால் அதிக இடை­யூ­று­கள் ஏற்­படும். இத்­த­கைய தொல்லை­மி­குந்த உல­கில் ஒற்று­மையை நாம் கட்­டிக்­காக்க வேண்­டி­யது நமக்கு மிக முக்­கி­ய­மா­னது. பிள­வு­பட்­டால் நமக்கு வாய்ப்பு இல்­லா­மல் போய்­வி­டும்,” என்று திரு லீ எச்­ச­ரித்­தார்.

“ஐக்­கி­ய­மா­கத் திகழ்­வது ஒரு­பு­றம் இருக்க, தற்சார்பு, தொழில் முனைப்பு ஆகிய சாதனை எழுச்சி உணர்வு­களைக் கட்­டிக்­காத்து நாட்­டிற்­குச் செல்­வச்­செழிப்பை நாம் உரு­வாக்க வேண்­டும். பிரச்­சினை மிகுந்த உல­கில் முடிந்த அள­வுக்கு தலை­சி­றந்த நிலை­யில் நாம் திகழ வேண்­டும்,” என்றார் திரு லீ.

“பெரிய நாடு­கள் உள்­நோக்­கிய கண்­ணோட்­டத்­தைக் கொண்­டிருக்க முடி­யும். அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய விலையைக் கொடுக்கவும் அவற்­றால் முடி­யும். ஆனால் சிறிய தீவு நாடான சிங்­கப்­பூ­ரால் அதைச் செய்ய முடி­யாது. உல­கத்­தோடு தொழில் நடத்­து­வ­தைப் பொறுத்­து­தான் நாம் உயிர்வாழ முடி­யும்.

“ஆகை­யால், நாம் எப்­போ­தும் திறந்த நிலை­யில் இருந்து வர­வேண்­டும். உல­கத்­தோ­டு­கூ­டிய தொடர்­பு­களைக் கட்­டிக்­காக்க வேண்­டும்.

“உலக நகர் என்ற முறை யிலும் அனைத்­து­லக மையம் என்ற முறை­யி­லும் மற்­ற­வர்­களுக்­குப் பய­னுள்ள நாடாக சிங்­கப்­பூர் தொடர்ந்து இருந்து வர­வேண்டும்,” என்றார் திரு லீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!