மின் கட்டணம் 8% கூடும்; எரிவாயு செலவும் உயரும்

3வது காலாண்டில் 50% குடும்பங்கள் அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலை

உல­க­ள­வில் எண்­ணெய், எரி­வாயு நெருக்­கடி ஏற்­பட்டு இருக்­கும் நிலை­யில், சிங்­கப்­பூ­ரில் இன்று முதல் மூன்று மாத காலத்­திற்கு எரி­வாயு கட்­ட­ணம் ஏறக்­கு­றைய 8% அதி­க­ரிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

கிட்­டத்­தட்ட பாதி குடும்­பங்­கள் ஜூலை முதல் செப்­டம்­பர் வரைப்­பட்ட காலத்­திற்குக் கூடு­தலாக மின்சாரக் கட்­ட­ணத்­தைச் செலுத்த வேண்டி இருக்­கும்.

மூன்­றா­வது காலாண்­டுக்­கான மின்­சார கட்­ட­ணம், ஜிஎஸ்டி வரியைச் சேர்க்­கா­மல் ஒரு கிலோ­வாட் மணிக்கு 30.17 காசாக இருக்­கும் என்று மின் விற்­பனை நிறு­வ­னமான எஸ்பி குழுமம் நேற்று தெரி­வித்­தது.

இப்­போ­தைய கட்­ட­ணம் ஒரு கிலோ­வாட் மணிக்கு 27.94 காசாக இருக்­கிறது. மின்­சாரக் கட்­ட­ணம் சென்ற ஆண்டு ஏப்­ரல் முதலே அதி­க­ரித்து வரு­கிறது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மின் கட்­டண உயர்வு ஒரு­பு­றம் இருக்க, குழாய் மூலம் எரி­வா­யுவை விநி­யோ­கிக்­கும் சில்­லறை விற்­பனை நிறு­வ­ன­மான 'சிட்டி எனர்ஜி' நிறு­வ­னம், மூன்­றா­வது காலாண்­டில் குடும்­பங்­க­ளுக்­கான எரி­வாயுக் கட்­ட­ணம் ஒரு கிலோ­வாட் மணிக்கு 23.09 காசா­கக் கூடும் என்று அறி­வித்­தது.

இந்­தக் கட்­ட­ணம் இப்­போது 21.66 காசாக இருக்­கிறது. இந்த 1.43 காசு உயர்வு என்­பது 6.6% உயர்­வுக்கு ஈடா­னது.

எரி­பொ­ரு­ளுக்கு ஆகும் செலவு அதி­க­ரித்­து­விட்­டதே கட்­டண உயர்­வுக்கு கார­ணம் என்று இந்த இரண்டு நிறு­வ­னங்­களும் அறி­வித்து உள்­ளன.

உக்­ரேன் பிரச்­சினை கார­ண­மாக உல­க­ள­வில் எரி­வாயு, எண்­ணெய் விலை­ கடு­மை­யாக உயர்ந்து­விட்­டது. இதன் கார­ண­மாக எரி­சக்­தி செலவு கூடி­விட்­டது என்று எஸ்பி குழுமம் நிறு­வ­னம் நேற்று விளக்­கம் அளித்தது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக நாலறை வீட்­டில் வசிக்­கின்ற, மாதம் ஒன்­றுக்கு ஏறக்­கு­றைய 349 கிலோ­வாட் மணி மின்­சா­ரத்தைப் பயன்படுத்துகின்ற குடும்­பங்­க­ளுக்கு ஆகும் மாத சரா­சரி மின்­கட்­ட­ணம் ஜிஎஸ்டி வரியை சேர்க்­கா­மல் $8.25 அதி­க­ரிக்­கும் என்­பதை எஸ்பி குழுமம் நிறு­வ­னம் சுட்­டிக்­காட்­டி­யது.

பல பிரச்­சி­னை­கள் கார­ண­மாக உல­க­ள­வில் எரி­வாயு விலை சாதனை அள­வுக்கு உயர்ந்து இருக்­கிறது. அத­னால் மின்­சார கட்­ட­ணம் அதி­க­ரித்­து­விட்­டது.

குளிர்­கா­லம் வரு­வ­தால் மின்­சா­ரத்­துக்­கான தேவை கொஞ்­சம் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. அந்­தச் சூழ­லில் உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்து நிலை­மையை மோச­மாக்­கி­விட்­டது.

உக்­ரேன் போர் கார­ண­மாக எரி­பொ­ருளை ஏற்­று­மதி செய்ய முடி­யாத அள­வுக்கு ரஷ்­யா­வுக்கு எதி­ராக பல தடை­கள் விதிக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

இத­னால் கச்சா எண்­ணெய், டீசல், குழாய் எரி­வாயு ஆகி­ய­வற்றுக்குக் கிராக்கி கூடி­விட்­டது.

கச்சா எண்­ணெய் நேற்று ஒரு பீப்­பாய் விலை $116 ஆக இருந்­தது. சென்ற ஆண்டு இதே காலத்­தின்­போது ஒரு பீப்­பாய் விலை ஏறக்­கு­றைய $75 லிருந்து $76 வரை விற்­கப்­பட்­டது.

இதைக் கணக்­கிட்டுப் பார்க்­கை­யில் 12 மாத காலத்­தில் கிட்­டத்­தட்ட 52% விலை கூடி இருக்­கிறது என்­பது வர்த்­த­கர்­கள், தர­கர்­க­ளின் புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­வ­ரு­கின்­றன. ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டதால் மாற்று வழி­க­ளைத் தேட வேண்­டிய தேவை ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு ஏற்­பட்­டு­விட்­டது.

இதன் விளை­வாக சிங்­கப்­பூர் உள்­ளிட்ட உல­கின் எஞ்­சிய பகுதி ­க­ளு­டன் நேர­டி­யான, கடு­மை­யான போட்டி ஏற்­பட்­டு­விட்­டது.

சிங்­கப்­பூர் தன்­னு­டைய மின்­சாரத் தேவை­களில் ஏறக்­கு­றைய 95 விழுக்­காட்டு அளவை நிறை­வேற்ற எரி­வா­யுவை இறக்­கு­மதி செய்­கிறது.

இத­னி­டையே, ஐரோப்­பிய நாடு­கள் மாற்று எரி­பொ­ருள் வழி­களை நாடு­வ­தால் ஆசி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கு­மான வாய்ப்­பு­கள் மிகக் கடு­மை­யாக இருக்­கும் என்று சுயேச்­சை­யான எரி­சக்தி ஆய்வு தொழில்­துறை உத்தி நிறு­வ­ன­மான 'ரைஸ்­டட் எனர்ஜி' என்ற நிறு­வ­னம் தெரி­வித்­தது.

உல­க­ள­வில் விலை­வாசி அதி­க­ரிக்­கும் சூழ­லில் சிங்­கப்­பூரில் குறைந்த வரு­வாய் குடும்­பத்­தி­ன­ருக்­கும் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய மக்­க­ளுக்­கும் உதவும் வகை­யில் அர­சாங்­கம் அண்­மை­யில் $1.5 பில்­லி­யன் ஆத­ரவுத் திட்­டத்தை அறி­வித்­தது.

அதன் ஒரு பகு­தி­யாக ஒவ்­வொரு சிங்­கப்­பூர் குடும்­பத்­துக்­கும் $100 பய­னீட்டு ஈட்­டுத் தொகை வழங்­கப்­படும் என்று அர­சாங்­கம் அறி­வித்து உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!