You are here

விளையாட்டு

தொலைக்காட்சியில் கார்த்திகா

முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவுக்குத் திரையுலக வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் யோசனை சொல்ல, அதற்கான நேரம் கனிந்து வந்திருக்கிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கார்த்திகா. ‘பாகுபலி’ படத்தின் இயக்குநர் ராஜ மௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். இவர்தான் ‘பாகுபலி’ படத்தின் கதாசிரியர். இவரது கைவண்ணத்தில் ‘ஆரம்ப்’ (ஆரம்பம்) என்ற தொலைக்காட்சித் தொடர் உருவாகிறது.

சிங்கப்பூருக்கான நட்புமுறை ஆட்டத்தில் மெஸ்ஸி இல்லை

அடுத்த வாரம் அர்ஜெண்டினாவுடன் நட்புமுறை ஆட்டம் ஒன்றில் சிங்கப்பூர் பொருதவிருக்கிறது. அந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸியை நேரடியாகப் பார்க்கலாம் என பல ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவ்வேளையில் அவர்களது எதிர்பார்ப்பை முறியடிக்கும்விதமாக அர்ஜெண்டினாவின் கிளோரின் செய்தித்தாள் வெளியிட்ட செய்தியின்படி மெஸ்ஸி சிங்கப்பூருக்கு வராமலேயே இருக்கக்கூடும். இன்று பிரேசில் அணியுடன் நட்புமுறை ஆட்டம் ஒன்றில் விளையாடிவிட்டு மெஸ்ஸி நேரடியாக அர்ஜெட்ணடினாவுக்குத் திரும்புவார் என அர்ஜெண்டினாவின் மிகப்பெரிய செய்தித்தாளான கிளேரின் செய்தி வெளியிட்டிருந்தது.

செல்சியில் டியேகோ கோஸ்டாவுக்கு இடமில்லை

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்ற செல்சி குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் டியேகோ கோஸ்டாவுக்குத் தமது அணியில் இடமில்லை என்று பயிற்றுவிப்பாளர் அண்டோனிரே கோண்டே கூறியுள்ளார்.

அவருக்கு செல்சியில் எதிர்காலம் இல்லை என கோண்டே தம்மிடம் கூறியதைத் தொடர்ந்து செல்சி குழுவைவிட்டு விலகுவதைத் தவிர வேறு எந்தவழியும் தெரியவில்லை என்று புலம்புகிறார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கோஸ்டா.

கொலம்பியாவுடனான நட்புமுறை ஆட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் விளையாடிய பிறகு ஸ்பானிய செய்தியாளர்களிடம் பேசினார் கோஸ்டா.

மழையால் மீண்டும் மீண்டும் ஏமாற்றம் அடைந்த ஆஸ்திரேலிய அணி

படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: சிறிய கிரிக்கெட் உல­கக் கிண்ணம் என்று அழைக்­கப்படும் வெற்றியாளர் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரே­லிய அணி மீது மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தைக் கொட்டித் தீர்த்­துள்ளது மழை. இங்கிலாந்தில் நடந்து வரும் இப்போட்டித் தொடரில் பங்கேற்­றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பங்ளாதேஷ், ‘பி’ பிரிவில் நடப்புச் சாம்பியன் இந்­தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்­ தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

கிரிக்கெட் விதிமுறை மாற்றங்கள் ஐசிசி ஏற்பு

துபாய்: கிரிக்கெட் வீரர்களை திடலை விட்டு வெளியேற்றும் சிவப்பு அட்டை, கிரிக்கெட் மட்டை அளவு குறைப்பு, ‘ரன் அவுட்’ முறைகளில் மாற்றங்கள் ஆகிய பரிந்துரைகளை ஐசிசி எனப்படும் அனைத்துலகக் கிரிக்கெட் மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. திடலில் மிக மோசமாக நடந்துகொள்ளும் வீரர்ர்களைத் திடலைவிட்டு வெளியேற்ற ஏதுவாக நடுவர்களுக்குச் சிவப்பு அட்டை அதிகாரம் அளிக்க அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) கிரிக்கெட் குழு கடந்த வாரம் பரிந்துரைத் திருந்தது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: விராத் கோஹ்லி பாராட்டு

பாகிஸ்தான் அணியைத் திணறடித்த கோஹ்லி, யுவராஜ் சிங் ஜோடி. படம்: ஏஎஃப்பி

பர்மிங்ஹம்: சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பர்மிங்ஹமில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பந்தடித்தது. அது 48 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ஓட்டங்கள் குவித்தது. ரோகித் சர்மா 91 ஓட்டங்களும் (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அணித் தலைவர் விராத் கோஹ்லி 68 பந்துகளில் 81 ஓட்டங்களும் (6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), தவான் 68 ஓட்டங்களும் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்கள்), யுவராஜ் சிங் 32 பந்துகளில் 53 ஓட்டங்களும் (8 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தனர்.

ஹசார்ட்டுக்கு எலும்பு முறிவு

பிரசல்ஸ்: செல்சி வீரர் ஈடன் ஹசார்ட்டுக்கு பெல்ஜியக் குழு வுடன் பயிற்சி மேற்கொண்ட போது கணுக்கால் காயம் ஏற்பட்டது. அவரது கணுக்கால் எலும் பில் முறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் அடுத்த சில ஆட்டங்களில் களமிறங்கமாட்டார்.

ரொனால்டோ: எனது சாதனைப் பட்டியல் பொய் சொல்லாது

கார்டிவ்: தாம் படைத்த சாதனைகள் தமது திறமையை நிரூபிப்பதாகவும் தமது சாதனைப் பட்டியல் பொய் சொல்லாது என்றும் ரியால் மட்ரிட் நட்சத்திர வீரர் கிறிஸ்டி யானோ ரொனால்டோ தெரி வித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் யுவெண்டஸைத் 4-1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து கிண்ணம் ஏந்தியது ரியால் மட்ரிட். அந்த ஆட்டத்தில் ரொனால்டோ இரண்டு கோல் களைப் போட்டார்.

வெற்றி நம்பிக்கையில் யுவென்டஸ்

கார்டிஃப்: ரியால் மட்ரிட் குழுவிற்கு எதிராக நாளை அதிகாலை 2.45 மணிக்கு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் லீக் காற்பந்து இறுதிப் போட்டிக்கு யுவென்டஸ் குழு சிறப்பாக ஆயத்தமாகி இருப்பதாக அதன் நிர்வாகி மஸிமிலி யானோ அலெக்ரி தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் பார்சிலோனாவிடம் வெற்றியை இழந்த யுவென்டஸ் இம்முறை கிண்ணத்தைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளதாக அலெக்ரி கூறியுள்ளார்.

இந்திய அணி அதிருப்தி

பர்மிங்ஹம்: சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நாளை பரம எதிரியான பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதவிருக்கிறது. இந்நிலையில், போட்டி நடக்கவுள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் திடலில் இந்திய அணிக்கான பயிற்சி ஏற்பாடுகளைக் கண்டு அணித்தலைவர் கோஹ்லியும் பயிற்றுவிப்பாளர் கும்ளேவும் அதிருப்தி அடைந்தனர். பிரதான திடலில் நேற்று ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதவிருந்ததால் அங்கு பயிற்சியில் ஈடுபட இந்திய அணியினர் அனுமதிக்கப்படவில்லை. மாறாக, அரங்கிற்கு வெளியே இருக்கும் சிறிய பயிற்சித் திடலில் இந்திய அணியினருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

Pages