திரைச்செய்தி

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடந்தது. தற்போது இப்படத்துக்கு DNS என்று பெயரிடப்பட்டுள்ளது.
சசிகுமார், சூரி நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் முதல் சுவரொட்டியும் சிறு காணொளியையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காணொளி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
மோகன்லால் நடித்துள்ள ‘நேரு’ திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் விழாவில் விஜய் சேதுபதி தன்னுடைய ஆசையை வெளியிட்டார்.
ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படமான ‘அனிமல்’ ஓடிடியில் வெளியாகிறது.