ராஷ்மிகா மந்தனா: தனுஷிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறேன்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடந்தது. தற்போது இப்படத்துக்கு DNS என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதாவது, ஆங்கிலத்தில் தனுஷ், நாகார்ஜூனா, சேகர் கம்முலா ஆகியோர் பெயர்களை எழுதினால் வரும் முதல் எழுத்துகளையே DNS என்று குறிப்பிடுகின்றனர்.

இதையடுத்து ராஷ்மிகா மந்தனாவின் தீவிர ரசிகர்கள், ‘அதென்ன DNS என்ற தலைப்பு? எங்கள் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவை தலைப்பில் விட்டுவிட்டீர்களே. இது நியாயமா? படத்துக்கு தற்காலிக தலைப்பாக DRNS என்று வைத்திருக்கலாம் அல்லவா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அனைத்து மொழிப் படங்களிலும் நாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அவர் தனுஷுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.

இந்நிலையில் தனுஷ் பற்றி ராஷ்மிகா மந்தனா பேசியபோது, “இயக்குநர் சேகர் கம்முலா என்னிடம் இப்படத்தின் கதையைப் பற்றி சொன்னவுடன், இப்படத்தில் நான் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

“அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். தனுஷ், எப்போதும் மிகச்சிறப்பான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பார். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருந்தேன்.

“இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தனுஷுடன் இணைந்து நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு, இனிமேல் என்னை நடிப்பில் மேம்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!