இந்தியா

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடுகிறது.
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 10 பேர் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) அதிகாலை விஜயவாடாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். சூர்யாபேட்டை மாவட்டம் கோதாடா அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் கார் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ரோயிங் – அனினி தேசிய நெடுஞ்சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மற்ற மாவட்டங்களில் இருந்து திபெங் மாவட்டம் துண்டிக்கப்பட்டது.
புதுடெல்லி: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகார்களுக்கு விளக்கமளிக்கும்படி பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
புதுடில்லி: இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதையடுத்து, அத்தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கும் நிலையில், முதல்கட்ட ஓட்டுப்பதிவு கடந்த 19ம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 65.50 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. பல்வேறு மாநிலங்களில் வெயில் காரணமாக ஓட்டு விழுக்காடு குறைந்ததாகக் கூறப்பட்டது.


கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகள் உட்பட, கர்நாடகாவில் 14; ராஜஸ்தானில் 13; மஹாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் எட்டு; மத்திய பிரதேசத்தில் ஏழு; அசாம் மற்றும் பீஹாரில் ஐந்து; சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்று; மணிப்பூர், திரிபுரா, ஜம்மு - காஷ்மீரில் தலா ஒரு தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதற்காக அந்தந்த மாவட்டங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் மூலப் பொருள்களைப் பிரித்து அனுப்பும் பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத வடகிழக்கு பகுதிகளுக்கும் பிற இடங்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது.