இந்தியா

பெங்களூரு: காசநோய் விழிப்புணர்வுக்கான இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘சாட்போட்’டை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கர்நாடகாவில் உள்ள கிராம மக்கள் கன்னட மொழியில் காசநோய் குறித்து பல வாக்கியங்களை ஒரு செயலியில் வாசித்தனர்.
புதுச்சேரி: மிச்சாம் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் புதுச்சேரி- சென்னை பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அலையின் உயரம் பல அடிகள் அதிகரித்துள்ளது. ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: பாஜகவின் கூட்டணிக் கட்சியாக அமலாக்கத் துறை செயல்படுகிறது என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
ஹைதராபாத்: சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியை அடுத்து, ராஜஸ்தானில் ஆட்சியைப் பறிகொடுத்த முதல்வா் அசோக் கெலாட், தெலுங்கானா முதல்வா் கே.சந்திரசேகர ராவ், சத்தீஸ்கர் முதல்வா் பூபேஷ் பாகேல் ஆகியோர் தங்களது பதவியை விட்டு விலகுவதாகக் கடிதம் அளித்தனர்.
புதுடெல்லி: ஐந்து மாநிலங்களுகளுக்கு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அவற்றில் மிசோரம் தவிர்த்த நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பாஜக மூன்று தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதன்மூலம் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது.