இந்தியா

புதுடெல்லி: உலகில் அரிசி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் இந்தியா, அடுத்த ஆண்டுவரை வெளிநாடுகளுக்கு அரிசி விற்பதற்கான கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஹ்ராடூன்: உத்தராகண்ட் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் கடந்த எட்டு நாள்களாக நடந்து வருகிறது. அந்தப் பணியை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங்கர் தாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
புதுடெல்லி: இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா இரண்டாம் கட்டமாக 32 டன் நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தது.
போபால்: பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் அம்மாநிலம் இதுவரை கண்டிராத வகையில் 76.22 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுடெல்லி: சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்திற்கு ஒரே கட்டமாகவும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.