சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் மறைந்திருந்து பார்க்கும் சம்பவங்களும் கடைத் திருட்டுகளும் 2023ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளன. ஆனால் நேரடியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் குறைந்துள்ளன.
கடமையைச் செய்யவிடாமல் நீதித் துறையை தடுக்க முயற்சி செய்த விவகாரத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) புவி கண்காணிப்பகத்தைச் சேர்ந்த இரண்டு அறிவியலாளர்கள் அதிகம் ஆராயப்படாத பேரண்ட்ஸ் கடலை ஆய்வு செய்யும் தங்களது பயணத்தைத் தொடங்கினர். ஆய்வகங்கள் நிரப்பப்பட்ட ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றில் டாக்டர் யான் யூ டிங்கும் திருவாட்டி டோ யுன் ஃபானும் தனது ஆய்வைக் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு அக்கடலில் மேற்கொண்டனர்.
சென்ற ஆண்டு அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளும் மற்ற ஆவணங்களும் வரும் மார்ச் மாதம் அழிக்கப்படும் என்று தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்போது சுத்தமான உணவு கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.