லியாண்டர் பயஸ் சாதனையை சமன் செய்த போபண்ணா

மயாமி: மயாமி பொது விருது டென்னிஸ் போட்டியில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் எப்டன், மார்சன் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) - ஹொராசியோ ஜெபலாஸ் (அர்ஜென்டினா) ஜோடியை எதிர்கொண்டது.

இதில் போபண்ணா ஜோடி 6-1, 6-4 என நேர் செட்டுகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

துபாய் வெற்றியாளர் காலிறுதியில் தோல்வி, இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் ரவுண்ட் ஆஃப் 32ல் வெளியேற்றம் ஆகியவை காரணமாக இரட்டையர் பிரிவில் போபண்ணா 2வது இடத்திற்கு பின்தங்கினார்.

தற்போது மயாமி பொது விருது போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடிப்பார். ஆஸ்திரேலியப் பொது விருது போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் முதலிடம் பிடித்தார். மேலும், தரவரிசையில் முதலிடம் பிடித்த வயதான வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

போபண்ணா ஜோடி இறுதிப் போட்டியில் இவான் டோடிக் (குரோவேஷியா) - ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது. போபண்ணாவின் 14வது ஏடிபி மாஸ்டர்ஸ் ஆயிரமாவது இறுதிப் போட்டியாகும். மேலும், மயாமி தொடரில் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார். ஏடிபி தொடர் அளவிலான 63வது இறுதிப் போட்டி இதுவாகும். இரட்டையர் பிரிவில் 25 வெற்றியாளர் பட்டம் வென்றுள்ளார்.

போபண்ணா - எப்டன் ஜோடி ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடரின் இறுதிப் போட்டியில் ஐந்தாவது முறை களம் காண்கிறது. லியாண்டர் பயசுக்குப் பிறகு ஏடிபி மாஸ்டர்ஸ் (9) தொடரிலும் இறுதிப் போட்டிக்கு நுழைந்த 2வது இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!