ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ்: 43 வயதில் வெற்றியாளர் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணா

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ளது.

ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ் தொடர் மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - இத்தாலியின் சைமன் பொலேலி, ஆண்ட்ரியா வவாசூரி ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற ஆட்டக்கணக்கில் வென்று வெற்றியாளர் பட்டம் வென்று அசத்தியது. இரட்டையர் பிரிவில் 43 வயதாகும் போபண்ணா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். இந்த வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றவர் ரோஹன் போபண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!