$4 பில்லியன் செலவு செய்த இபிஎல் அணிகள்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணிகள் தங்கள் அணிகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தப் பருவத்தின் தொடக்கத்தில் மட்டும் கிட்டத்தட்ட 4 பில்லியன் வெள்ளி செலவு செய்துள்ளன.

பருவத்தின் தொடக்கத்தில் விளையாட்டு வீரர்களை வாங்கும் நடவடிக்கையில் மட்டும் அந்த 4 பில்லியன் வெள்ளி செலவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு முறை விளையாட்டு வீரர்களை வாங்கவும் விற்கவும் அனுமதி உண்டு. பருவத்தின் தொடக்கத்தில் முதல் விற்பனை இடம் பெறும், பருவத்தின் நடுப்பகுதியில் இரண்டாவது விற்பனை நடக்கும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை முதல் விற்பனைக் காலத்தில் 750 மில்லியன் வெள்ளி கூடுதலாக செலவு செய்யப்பட்டுள்ளது.

முதல் விற்பனைக் காலம் முடியும் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 435 மில்லியன் வெள்ளி செலவு செய்துள்ளன இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணிகள்.

இரண்டாவது விற்பனைக் காலத்திலும் அணிகள் வீரர்களை வாங்கவும் விற்கவும் முயற்சி செய்யும் என்பதால் இந்தப் பருவத்தில் சாதனை அளவாக செலவுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை ஐரோப்பாவில் நடந்த முதல் விற்பனைக் காலத்தில் நடந்த மொத்த செலவுகளில் 48 விழுக்காடு செலவை இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணிகள் செய்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!