ஆர்சனல், யுனைடெட் பலப்பரீட்சை

லண்டன்: அண்மை ஆண்டுகளில் களையிழந்து, பிறகு சென்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் புத்துயிர் பெற்ற பரம வைரிகள் மீண்டும் மோதவுள்ளன. சென்ற பருவத்தில் லீக் விருதை வெல்லும் விளிம்பிற்குச் சென்று பட்டியலில் இரண்டாம் இடத்தில் முடித்த ஆர்சனலும் அதற்கு அடுத்த நிலையில் மூன்றாவது இடத்தைப் பிடித்த மான்செஸ்டர் யுனைடெட்டும் ஞாயிற்றுக்கிழமையன்று சந்திக்கின்றன.

இந்தப் பருவத்தின் முதல் மூன்று ஆட்டங்களில் இரண்டில் வென்ற ஆர்சனல் சென்ற ஆட்டத்தில் எதிர்பாரா விதமாக ஃபுல்ஹமுடன் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. இருந்தாலும் அக்குழு பொதுவாக சிறப்பாக விளையாடி வந்துள்ளது.

காயமடைந்த ஆர்சனலின் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் கேப்ரியல் ஜேசுஸ் ஃபுல்ஹமுக்கு எதிரான ஆட்டத்தில், சிறிது நேரத்துக்குக் களமிறங்கினார். யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசுஸ் கூடுதல் நேரம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இந்த ஆட்டத்தில் வெற்றிகண்டால் அது ஆர்சனலுக்கு நம்பிக்கை தரும் வெற்றிப் பாதையை அமைத்துத் தரக்கூடும் என்பது நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டாவின் நம்பிக்கை.

“ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அது எங்கள் பருவத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்காது. ஆனால் அது நம்பிக்கையையும் தொடர்ந்து வெற்றிபெறுவதற்கான பாதையையும் அமைத்துத் தரும். அனைத்துலக அணிகள் விளையாடுவதற்கு குழுக்களுக்கான ஓய்வு காலம் வரவிருக்கும் நிலையில் சிறப்பாக ஆடி ஆட்டத்தில் வெற்றிகண்டு அடுத்தக் கட்ட ஆட்டங்களை நம்பிக்கையுடன் அணுகவேண்டும்,” என்றார் அர்ட்டெட்டா.

யுனைடெட்டின் விளையாட்டு இதுவரை அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை. இருந்தாலும் அக்குழு இதுவரை ஆடிய மூன்று லீக் ஆட்டங்களில் இரண்டில் வென்றுள்ளது.

எனினும், டொட்டன்ஹம் ஹாட்ஸ்பரிடம் 2-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சென்ற பருவத்திலிருந்தே பெரிய குழுக்களை அவற்றின் சொந்த மண்ணில் வெல்வது யுனைடெட்டுக்குப் பெரும் சவாலாக இருந்து வந்துள்ளது.

சென்ற பருவம் கோல் போட சிரமப்பட்டது யுனைடெட். அப்பிரச்சினையைத் தீர்க்க டென்மார்க்கைச் சேர்ந்த 20 வயது நட்சத்திரத் தாக்குதல் வீரர் ராஸ்முஸ் ஹாய்லண்டைக் குழு வாங்கியது.

யுனைடெட்டில் சேர்ந்ததிலிருந்து காயமுற்றிருந்த ஹாய்லண்ட் ஆர்சனலுக்கு எதிராகக் களமிறங்கக்கூடும் என்று கூறினார் நிர்வாகி எரிக் டென் ஹாக்.

“கடந்த வாரம் அவர் (ஹாய்லண்ட்) பயிற்சியில் நன்றாகச் செய்தார். இன்னும் ஒரு பயிற்சி எஞ்சியுள்ளது. ஆனால் அவர் சிறப்பாக இயங்குவதால் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ள விளையாட்டில் அவர் ஈடுபடுவார்,” என்று டென் ஹாக் குறிப்பிட்டார்.

விளையாட்டாளர்களை வாங்கி விற்பதற்கான காலகட்டத்தின் கடைசி இரண்டு நாள்களில் யுனைடெட் மேலும் சில வீரர்களை வாங்கி குழுவை வலுப்படுத்தியது. மொரோக்கோவைச் சேர்ந்த சோஃபியான் அம்ரபாட், ஸ்பானிய விளையாட்டாளர் செர்ஜியோ ரெகுவியோன், முன்னாள் யுனைடெட் தற்காப்பு வீரர் ஜானி எவன்ஸ் உள்ளிட்டோரை யுனைடெட் வாங்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!