தடுமாறாமல் வெல்ல முனைப்பு

உலகக் கிண்ண கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா

புதுடெல்லி: சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியபோதும் தட்டுத் தடுமாறியே அவ்வெற்றி கைசேர்ந்தது.

இந்நிலையில், புதன்கிழமை நடக்கவிருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தடுமாற்றம் ஏதுமின்றி, நேர்த்தியாக ஆடி, இந்திய அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்த சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் போலன்றி, டெல்லி ஆடுகளம் பந்தடிப்புக்குச் சாதகமானது. அதனால், கடந்த வாரம் தென்னாப்பிரிக்கா-இலங்கை இடையிலான ஆட்டத்தைப்போல, இப்போட்டியிலும் ஓட்ட மழை பொழியும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியைப் பொறுத்தமட்டில், தொடக்கப் பந்தடிப்பாளர் ஷுப்மன் கில் இன்னும் டெங்கித் தொற்றிலிருந்து முழுமையாக குணமடையவில்லை. அதனால், சனிக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதையடுத்து, இன்றைய போட்டியிலும் இஷான் கிஷன், அணித்தலைவர் ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராகக் களமிறங்குவார். இவ்விருவரைப் போலவே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஓட்டமேதும் எடுக்காமல் ஆட்டமிழந்த ஷ்ரேயாஸ் ஐயரும் ஓட்டம் குவித்தாக வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

டெல்லி அரங்கில் தன் பெயர் சூட்டப்பட்ட பெவிலியனுக்கு முன்னால் முதன்முறையாக விளையாடவிருக்கிறார் விராத் கோஹ்லி. அவருடன், ஆசியக் கிண்ணப் போட்டிகளிலிருந்து சிறப்பாக விளையாடி வரும் லோகேஷ் ராகுல் இந்திய அணியின் பந்தடிப்பிற்கு மேலும் வலிமை சேர்க்கிறார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை, மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களம்காணத் திட்டமிட்டால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிட்டாமல் போகலாம். அணியில் இந்த ஒரு மாற்றமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்ளாதேஷுக்கு எதிரான தனது முதல் போட்டியில் பந்தடிப்பில் கிட்டத்தட்ட படுத்தேவிட்ட ஆப்கான் அணி, இன்றைய ஆட்டத்தில் எழுச்சியுடன் ஆடி, இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி தர முயலலாம்.

அவ்வணியின் பந்துவீச்சு முஜிப் உர் ரகுமான், ரஷீத் கான் என இரு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களையே பெரிதும் நம்பியிருக்கிறது.

டி20 போட்டிகளில் எதிரணிகளுக்குக் கடும் சவாலாக விளங்கினாலும், ஒருநாள் போட்டி என்பதால் ரஷீத் கானை ஆதிக்கம் செலுத்தவிடாமல் இந்திய வீரர்கள் தற்காப்புடன் ஆடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்ளாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ஒன்பது ஓவர் வீசி, 48 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்; விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!