பங்ளாதேஷை பங்கம் செய்த இந்தியா

12-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது

ஹாங்ஜோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பேராதிக்கம் செலுத்தி, கோல்மழை பொழிந்து எதிரணிகளைத் திணறடித்து வருகிறது.

‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, திங்கட்கிழமை தனது ஐந்தாவது ஆட்டத்தில் பங்ளாதேஷை எதிர்கொண்டது.

ஹர்மன்பிரீத்தும் மந்தீப் சிங்கும் ‘ஹாட்ரிக்’ கோலடிக்க, அவ்வணி 12-0 என்ற கோல் கணக்கில் பங்ளாதேஷ் அணியை வெளுத்தெடுத்தது.

இரு பிரிவுகளில் தலா ஆறு அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்திய அணி தனது ஐந்து ஆட்டங்களிலும் வாகைசூடியது. இதன்மூலம், 15 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

வரும் 4ஆம் தேதி நடக்கும் அரையிறுதியில் அது தென்கொரியா அல்லது சீனாவை எதிர்த்தாடும். இறுதிப் போட்டி 6ஆம் தேதி நடைபெறும்.

முன்னதாக, உஸ்பெகிஸ்தான் (16-0), சிங்கப்பூர் (16-1), ஜப்பான் (4-2), பாகிஸ்தான் (10-2) என மற்ற அணிகளையும் இந்தியா பந்தாடியிருந்தது.

இதன்மூலம், ஐந்து போட்டிகளிலும் சேர்த்து 58 கோல்களை அடித்துள்ள இந்திய அணி, எதிரணிகளை மொத்தம் ஐந்து கோல்கள் மட்டுமே அடிக்க அனுமதித்தது.

இதனிடையே, மகளிர் பிரிவிலும் இந்திய அணி மூன்று ஆட்டங்களில் ஏழு புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!