- உங்கள் ஓய்வு காலத்தை சிறந்த முறையில் அனுபவிக்க மத்திய சேமநிதி சாதாரணக் கணக்கில் (ஓ.ஏ) இப்போதே முதலீடு செய்யுங்கள்.

ஓய்வுக்கால நிதியைப் பெண்கள் மேலும் அதிகரிக்க ஊக்குவிப்பு

இன்றைய சூழலில் அதிகமான பெண்கள் தங்களின் நிதி நிர்வாகத்தைத் தாங்களே கவனித்துகொள்ளவும் நிதி சுதந்திரத்துடன் விளங்கவும் ஓய்வுக்கால சேமிப்பை வடிவமைக்கவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

நீண்டகால நோக்கத்துடன் சொத்து சேர்க்க மத்திய சேமநிதியை முக்கிய தளமாகப் பயன்படுத்துவதில் இன்னும் முழுமையாகப் பெண்கள் பயன்படுத்தலாம் என்பது எண்டோவஸ் நிறுவனத்தின் முதலீட்டு ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநர் மின் எக்ஸ்தெல்ம்மின் கருத்து.

“மூத்த பெண்களுக்கு மத்திய சேமநிதி சேமிப்புக் கணக்கில் எஞ்சியுள்ள பணம் ஆண்களைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால், பெண்கள் தங்களுடைய மத்திய சேமநிதி சாதாரணக் கணக்கில் உள்ள சேமிப்புகளை முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன,” என்றார் மின்.

“இதன் மூலம் தங்கள் நீண்ட வாழ்நாளில் போதுமான சேமிப்பு வைத்திருப்பதை பெண்கள் உறுதிசெய்யலாம். மேலும், ஆண்களுடன் ஒப்பிடுகையில், ஓய்வுக்கால நிதிகளில் உள்ள இடைவெளியை ஈடுசெய்ய இது உதவும்,” என்றும் அவர் கூறினார்.

மத்திய சேமநிதிக் கழகத்தின் ஆக அண்மைய வருடாந்திர அறிக்கையின்படி, 45 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு, ஆண்களை விட பொதுவாக மத்திய சேமநிதியில் எஞ்சியுள்ள தொகை குறைவாகவே உள்ளது. 

பெண்களுக்குக் குறைவான மத்திய சேமநிதி எஞ்சியிருக்கும் போக்கு, 80 வயதைக் கடந்தோருக்கும் தொடர்கிறது.  

இவ்வாண்டின் அனைத்துலக மகளிர் தினத்தின் கருப்பொருளான “பெண்களிடம் முதலீடு செய்தல்: வளர்ச்சியை துரிதப்படுத்துதல்” என்பது கொண்டாட்டத்தைத் தாண்டி நோக்கத்துடனும் ஆக்கபூர்வமாகவும் செயல்பட ஊக்கமளிப்பதாக திருவாட்டி மின் கூறினார். முதலீடு குறித்த அவரது கட்டுரை பின்வருகிறது.

வயது முதிர்ந்த ஆண்களை விட பெண்களுக்கு குறைவான மசேநிதி சேமிப்பு

சிங்கப்பூரில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே மத்திய சேமநிதி சேமிப்பு இடைவெளி இருக்கவே செய்கிறது. இருப்பினும் மில்லிமன் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் 2009இலிருந்து அது படிப்படியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

மத்திய சேமநிதிக் கழகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின் புள்ளிவிவரங்களின் படி, சராசரியாக 45 வயது வரையிலான மத்திய சேமநிதி பெண் உறுப்பினர்கள் அதே வயதில் உள்ள ஆண்களை விட அதிக மத்திய சேமநிதித் தொகையை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

உதாரணமாக, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, 20க்கும் 25 வயதுக்கும் மேற்பட்டவர்களில், ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்கள் மத்திய சேமநிதிக் கணக்கில் சராசரியாக $15,106 இருந்தது. இது ஒவ்வோர் ஆணிடம் சராசரியாக இருந்த $9,278ஐக் காட்டிலும் அதிகம்.

இந்த வேறுபாடு, குறிப்பாக 30க்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இடையே படிப்படியாகக் குறைந்தது.

45 வயதிற்குப் பிறகு, மத்திய சேமநிதியில் எஞ்சிய மொத்த தொகை ஆண்களை விட பெண்களுக்குக் குறைவாக இருக்கிறது.

குடும்பச் சூழலால் எழும் பொறுப்புகள் காரணமாக சில பெண்கள் வேலை செய்வதைத் தற்காலிகமாக நிறுத்துவதால் இத்தகைய சேமிப்பு இடைவெளி ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. 

ஆண்களை விட பெண்களுக்கு நீண்ட ஆயுள் காலம்

மத்திய சேமநிதி சாதாரணக் கணக்கில் முதலீடு செய்வதற்கு மற்றொரு காரணம், பெண்கள் பொதுவாக ஆண்களை விட நீண்ட காலம் வாழ்கிறார்கள். இதனால் ஓய்வுகாலத்தில் பெண்களுக்கு அதிக நிதி தேவைப்படும்.

2023ஆம் ஆண்டு மே மாதத்தில் சிங்கப்பூர்ப் புள்ளிவிவரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் பெண்களின் ஆயுள் காலம் 85.2 ஆண்டுகள் என்றும் ஆண்களின் ஆயுள் காலம் 80.7 ஆண்டுகள் என்றும் தெரியவந்தது.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு அவை பெண்களுக்கு 84.1 ஆண்டுகளும் ஆண்களுக்கு 79.5 ஆண்டுகளுமாக இருந்தன. 

மனிதவள அமைச்சு 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி வரவுசெலவுத் திட்டத்தை அடுத்த அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது ஓய்வுபெறும் வயதை 64ஆகவும், மறுவேலைவாய்ப்பு வயதை 69 ஆகவும் உயர்த்த உள்ளதாகத் தெரிவித்தது.

2021ஆம் ஆண்டின் இறுதியில், 60-65 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மத்திய சேமநிதிக் கணக்கில் சராசரியாக $160,953 வைத்திருந்தனர். இது ஆண்களை விட 7.7% குறைவு.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய சேமநிதி உறுப்பினர்கள் கலந்துகொண்ட கருத்தாய்வை அடிப்படையாகக் கொண்டு, 2021ல் எண்டோவஸ் சிங்கப்பூர் ஓய்வுகால அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த கருத்தாய்வின்படி, ஆண்களைவிட பெண்களுக்கு ஓய்வுகால பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகம் என்று கண்டறியப்பட்டது.

உங்கள் ஓய்வுக்கால சேமிப்பை அதிகரியுங்கள்

மத்திய சேமநிதிக் கணக்கு முதலீட்டுத் திட்டத்தின்கீழ், சாதாரணக் கணக்கில் இருக்கும் எஞ்சிய தொகையை பங்குகள், பத்திரங்கள், யூனிட் டிரஸ்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முதலீடு செய்யலாம்.

யுஓபி, டிபிஎஸ், ஒசிபிசி ஆகிய மூன்று உள்ளூர் வங்கிகள் மூலம் மத்திய சேமநிதி முதலீட்டு திட்டத்தின் மின்னிலக்கக் கணக்கை இப்போதே தொடங்கலாம்.

2019ஆம் ஆண்டு மத்திய சேமநிதி முதலீட்டின் முதல் மின்னிலக்க ஆலோசனை நிறுவனமாக எண்டோவஸ் விளங்கியது. மத்திய சேமநிதி உறுப்பினர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஏதுவான திட்டங்களை வழங்குவதில் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

உங்கள் மத்திய சேமநிதியை முதலீடு செய்வதைத் தவிர, ஓய்வுபெறுவதற்கும் உங்கள் நீண்டகால நிதி இலக்குகளை அடைவதற்கும் வழிகள் உள்ளன.

நமது ஓய்வுகாலக் குறிக்கோள்களில் மத்திய சேமநிதி மிக முக்கியப் பங்காற்றுகின்றன. நாம் அதை கவனத்துடன் நிர்வகிக்கவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!