2026ல் ஓய்வு பெறுதல், மறு வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு உயர்த்தப்படும்

சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 64க்கு உயர்த்தப்படவிருக்கிறது. தற்போது அது 63ஆக உள்ளது.

அதேபோல மறுவேலைவாய்ப்புக்கான வயதும் 68லிருந்து 69க்கு உயர்த்தப்படும்.

தகுதிபெறும் ஊழியர்களுக்கு 69 வயது வரை மறு வேலைவாய்ப்பு அல்லது வேலைவாய்ப்பு உதவியை நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங், மார்ச் 4ஆம் தேதி இந்தத் தகவலை வெளியிட்டார்.

அமைச்சு, தொழிலாளர் சங்கங்கள், நிறுவனங்கள் என முத்தரப்பும் இதன் தொடர்பில் இணக்கம் கண்டதாக அவர் தெரிவித்தார்.

இவ்விரு வயது வரம்புகளும் இதற்கு முன்னர் 2022ல் உயர்த்தப்பட்டன. முன்னதாக, 2030ஆம் ஆண்டுக்குள் ஓய்வு பெறும் வயது 65க்கும் மறு வேலைவாய்ப்புக்கான வயது 70க்கும் உயர்த்தப்படும் என்று 2019ஆம் ஆண்டில் அரசாங்கம் அறிவித்திருந்தது.

நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும், தயார்ப்படுத்திக்கொள்ள போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வயது வரம்பு உயர்த்தப்படும் தேதியை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமது அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் டான், மனிதவள அமைச்சு இந்த ஆண்டு மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் என்றார்.

உள்ளூர் ஊழியர்களின் வேலைவாய்ப்பை உயர்த்துதல், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஓய்வுக்காலத்திற்குப் போதிய தொகை இருப்பதற்கு ஆதரவளித்தல், அனைவரையும் உள்ளடக்கிய வேலையிடத்தை ஊக்குவித்தல் ஆகியவை அவை. குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வு பெறும் வயதிற்கு முன்பாக, வயதைக் காரணம் காட்டி வேலையிலிருந்து நீக்கப்படும் ஊழியர்களைப் பாதுகாப்பதும் இதில் அடங்கும்.

விரைவில் சந்திக்கவிருக்கும் சிக்கல்கள், குறையும் பிறப்பு விகிதம், மூப்படையும் மக்கள்தொகை ஆகியவை ஊழியர் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் கவலை அளிப்பதாக டாக்டர் டான் கூறினார்.

“அடுத்த பத்தாண்டுகளில் நமது உற்பத்தியைத் தக்கவைக்கத் தவறினால், பொருளியல் வளர்ச்சி வீழ்ச்சியடையும். அதனால் நாம் இன்னலுக்கு ஆளாவோம் என்பது கவலையளிக்கிறது,” என்றார் அவர்.

வேலையிடங்களைப் பாகுபாடற்றவையாகக் கொண்டிருக்கவும், மக்கள்தொகையின் பல்வேறு பிரிவினரை ஊழியரணியில் சேர்க்கவும் மனிதவள அமைச்சு பன்முனை அணுகுமுறையைக் கையாள்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு சட்ட அங்கீகாரம் பெறவிருக்கும் இரு மசோதாக்கள், வயது, இனம், உடற்குறை போன்வற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளைத் தடுக்கவும் இணையவழி ஊழியர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு வழங்கவும் உதவும்.

நீக்குப்போக்கான வேலை எற்பாடு தொடர்பில் ஊழியர்களும் நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்முறை குறித்த தெளிவான வழிகாட்டிக் குறிப்புகள் இந்த ஆண்டு வெளியிடப்படும் என்று அமைச்சர் கூறினார்.

வெளிநாட்டுத் திறனாளர்களைப் பணியமர்த்துதல், உலக அரங்கில் உள்ளூர்த் திறனாளர்கள் கூடுதல் போட்டித்தன்மையுடன் விளங்க உதவுதல், இவ்விரண்டுக்குமான தேவைகள் தொடர்பில் சமநிலை காணுதல் ஆகியவை தொடர்பான கொள்கைகள் குறித்துத் தமது உரையில் அவர் கோடிகாட்டினார்.

உள்ளூர்த் திறனாளர்களின் போட்டித்தன்மைக்கு உதவ, மேலும் நான்கு வேலை உருமாற்றத் திட்டங்கள், முதலாளிகளுக்கான ஆதரவுத் திட்டங்கள் போன்றவை கைகொடுக்கும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!