தக்கலை முஸ்லிம் சங்கத்தின் ‘ஞானப்புகழ்ச்சி’ நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் 1939இல் தக்கலை சங்கத்தை சிங்கப்பூரில் நிறுவி சமூக சேவையாற்றி வருகிறார்கள்.

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ரோஜாக் உணவின் தயாரிப்பு முன்னோடிகளான தக்கலை மக்கள், இன்றுவரை அதன் சுவையை தனித்தன்மையோடு கையாள்வதோடு சிங்கப்பூர் சமூகத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பங்காற்றி வருகிறார்கள்.

தக்கலை என்றாலே ஞானமேதை பீர் முஹம்மது அப்பா என்கிற இறைநேசரின் பெயர் நினைவுக்கு வரும். தென்காசியில் பிறந்த சூஃபி ஞான மேதையான அவருடைய மரபுக்கவிதைகளால் ஆன ‘ஞானப்புகழ்ச்சி’ மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பல பல்கலைக் கழகங்கள் ஞானப்புகழ்ச்சியை தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் ரஜப் மாதத்தில் தக்கலை தர்காவில் ஞானப்புகழ்ச்சி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறும். தமிழ்நாடு மட்டுமன்றி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் இலங்கை, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் அதில் கலந்துகொள்வர்.

அதை முன்னிட்டு, இவ்வாண்டு ஜனவரி 25 ந்தேதி டன்லப் தெரு அப்துல் கபூர் பள்ளிவாசல் பன்னோக்கு அரங்கில் ஞானப்புகழ்ச்சி நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் தக்கலை முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

கிட்டத்தட்ட 70 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், முனைவர் எச். எம். சலீம், ஞானப்புகழ்ச்சி பற்றி எடுத்துரைத்தார். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் இணை அமைப்பினர் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

செய்தி: தக்கலை முஸ்லிம் சங்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!