தொண்டூழியத்தை ஊக்குவிக்கும் மாரியூர் சங்கம்

பிரிட்­டிஷ் கால­னித்­துவ ஆட்­சி­யின்­போது உடல் உழைப்­புத் தொழி­லார்­க­ளாக சிங்­கப்­பூ­ருக்­குக் குடி­பெ­யர்ந்த தமி­ழ­கத்­தின் மாரி­யூ­ரைச் சேர்ந்­தோர் ‘மாரி­யூர் அசோ­சி­யே­ஷன் சிங்­கப்­பூர்’ எனும் சங்­கத்தை அண்­மை­யில் தொடங்கி உள்­ள­னர்.

சென்­னை­யி­லி­ருந்து ஏறத்­தாழ 570 கிலோ­மீட்­டர் தொலை­வில் கட­லோ­ரம் அமைந்­துள்­ளது மாரி­யூர். அங்­கி­ருந்து வந்­தோர் தொடக்­கத்­தில் கொள்­க­லன் கையா­ளும் தொழி­லா­ளர்­க­ளாக இருந்­த­னர்.

சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் அடைந்த பின்­னர் அவர்­களில் பெரும்­பா­லோர் ரொட்டி பரோட்டா, மீ கோரிங் தயா­ரிப்­பில் ஈடு­பட்­ட­னர். பின்­னர் 1980களுக்­குப் பிறகு தங்­கள் குடும்­பங்­களை இங்கு வர­வ­ழைத்­த­னர்.

சிங்­கப்­பூ­ரில் பயின்ற இவர்­களின் இரண்­டாம் தலை­மு­றை­யி­னர் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­படும் நோக்­கில் இச்­சங்­கம் உருவா­ன­தாக சங்க நிர்­வா­கம் தெரிவித்தது.

இம்­மா­தம் 10ஆம் தேதி உள்துறை, தேசிய வளர்ச்சி துணை­ய­மைச்­சர் முக­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம் மாரி­யூர் சங்­கத்­தைத் தொடங்­கி ­வைத்துச் சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.

மாரி­யூ­ரி­லி­ருந்து குடி­யே­றி­யோர் சிங்­கப்­பூர் அங்­கா­டித் தொழி­லில் முத்­திரை பதித்து உண­வுப் பண்­பாட்­டின் மூலம் சமூ­கத்தை இணைப்­ப­தாக அவர் தமது உரை­யில் கூறி­னார்.

நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய சிண்டா தலைமை நிர்­வாக அதி­காரி அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன், மாரி­யூர்க்­கா­ரர்­கள் உழைப்­பால் இன்று சமூ­கத்­தில் உயர்ந்து நிற்­ப­தா­கக் கூறி­னார்.

மாரி­யூ­ரைச் சேர்ந்தவர்களை சிங்­கப்­பூர் சமூ­கத்­து­டன் ஒன்­றி­ணைக்­க­வும் வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்­குக் கல்வி உதவி அளிக்­க­வும் சிங்­கப்­பூர் முஸ்­லிம் பேர­வை­யு­டன் இணைந்து செயல்­ப­ட­ உள்­ள­தா­கத் தெரி­வித்­தார் சங்­கத் தலை­வர் ஜின்னா.

நிகழ்ச்­சி­யில் பங்­கு­கொண்ட எழுத்­தா­ளர் காசிம் ஷா நவாஸ், 60, இது­வரை குடும்ப விழாக்­களில் ஒன்­று­கூ­டிய மாரி­யூர் மக்­கள் இனி சமு­தாய மேம்­பாட்­டிற்­காக இணைந்து பாடு­பட இருப்­பதை வர­வேற்­ப­தா­கக் கூறி­னார்.

காலனி ஆதிக்க காலத்­தில் சிங்­கப்­பூ­ருக்­குப் புலம்­பெ­யர்ந்த மக்­க­ளின் வர­லாற்றை மாரி­யூர் இளை­யர்­கள் எழுத முன்­வர வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

கல்சா சங்­கக் கட்­ட­டத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் ஏறக்­கு­றைய 350 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

தக­வல், படம்: மாரி­யூர் சங்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!