வணிக, சமூகப் பயன்பாட்டிற்கு எம்ஆர்டி தடங்கள் கீழுள்ள நிலத்தை குத்தகைக்குவிட ஆய்வு

ஈசூன், சுவா சூ காங் எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகிலுள்ள ரயில் மேம்பாலங்களுக்கு அடியில் உள்ள நிலப்பகுதிகள் வணிக அல்லது சமூகப் பயன்பாட்டிற்காக குத்தகைக்கு விடப்படலாம். அத்தகைய திட்டம் சாத்தியமானது என்று அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.

ஈசூன், சுவா சூ காங் ஆகிய இரு இடங்களுக்கு வெளிப்படையான சந்தை வாடகையை மதிப்பிட சொத்து மதிப்பீட்டாளரிடம் ஜனவரி 19ஆம் தேதி நிலப் போக்குவரத்து ஆணையம் ஒப்பந்தப்புள்ளி கோரியது. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 5,000 சதுர மீட்டர் மொத்த நிலப்பரப்பைக் கொண்டது.

ஈசூன் வட்டாரத்தில் உள்ள இந்த இடம், புளோக் 749 ஈசூன் ஸ்திரீட் 72 அருகே தொடங்கி புளோக் 757 ஈசூன் ஸ்திரீட் 72 அருகே முடிவடையும் நிலப்பகுதியாகும்.

சுவா சூ காங்கில் உள்ள நிலப்பரப்பு மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று, கியட் ஹோங் சமூக மன்றம் அருகேயுள்ளது. மற்றொன்று, புளோக் 346 சுவா சூ காங் லூப் அருகே உள்ளது. மூன்றாவது புளோக் 345 சுவா சூ காங் லூப் அருகே இருக்கிறது. ஒவ்வோர் இடத்தையும் குத்தகைக்கு விடுவதே ஆணையத்தின் திட்டமாகும். குத்தகைக்கு எடுப்பவர் ஆணையத்திற்கு வாடகை செலுத்துவார். அவர் உள்வாடகைக்கு விடுவார்.

குத்தகைக்கு எடுப்பவர் அப்பகுதியைச் சீர்செய்வதற்கான முழுச்செலவையும் ஏற்க வேண்டும். ஒவ்வோர் இடத்திற்கும் கிட்டத்தட்ட $7.04 மில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தான் வசூலிக்க நினைக்கும் வாடகை ஒவ்வொரு நிலப்பரப்பின் மதிப்புக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் திட்டத்தின் காலம், நிர்வாகிகளின் மூலதனச் செலவினங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த இரு பகுதிகளிலும் கட்டுமானப் பணிகள் 2025 ஜனவரியில் தொடங்கி, 2027 வரை ஈராண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது தற்போதைய திட்டம்.

அதன் பின்னர், 2034 செப்டம்பரில் முடிவடையும் எட்டு ஆண்டு ஒப்பந்தப் புள்ளியையோ அல்லது 2044 செப்டம்பரில் முடிவடையும் 18 ஆண்டு ஒப்பந்தப் புள்ளியையோ அப்பகுதியின் நிர்வாகிகள் பெறலாம்.

நியமிக்கப்பட்ட சொத்து மதிப்பீட்டாளர் இந்த அளவீடுகள், ஒட்டுமொத்த சந்தை நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டு தளங்களுக்கான வெளிப்படையான சந்தை வாடகை குறித்து ஆணையத்துக்கு ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பீட்டாளர் அப்பகுதியை ஒத்த சொத்துக்களின் ஒப்பீட்டு ஆய்வையும் செய்ய வேண்டும்.

எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகே உள்ள பகுதியைத் துடிப்புமிக்கதாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நிலையங்களுக்கு அருகேயுள்ள பகுதிகளின் சாத்தியமான பயன்பாடுகளை போக்குவரத்து அமைச்சு ஆராய்ந்து வருவதாக ஆணையம் கூறியது.

மேலும், 2025ல் ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பராமரிப்புச் சேவை நிலையம் செயல்படத் தொடங்கியதும் சாங்கி பராமரிப்புச் சேவை நிலையத்தின் மறுபயன்பாடு குறித்து ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

இதற்கிடையே, வடகிழக்கு ரயில் பாதையை நிர்வகிக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட், 2024 இறுதியில் பொங்கோல் பெருவிரைவு ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் “சைக்கிள் பகுதியை” உருவாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியது. சைக்கிள் ஆர்வலர்கள் சைக்கிள் தொடர்பான உபகரணங்களை வாங்கவும் உணவு சுவைக்கவும் இடம் அமையும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!