டிக்கெட்மாஸ்டர் வழங்கும் இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகளை சிங்போஸ்ட் விற்காது

டிக்கெட்மாஸ்டர் நிறுவனம் வழங்கும் இசை நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் இனி சிங்போஸ்ட் கிளைகளில் விற்கப்படமாட்டா.

சிங்போஸ்ட்டின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தார். வர்த்தக ரீதியான ஒப்பந்தங்கள், முடிவுகள் ஆகியவற்றின் தொடர்பில் கருத்து தெரிவிக்க அந்தப் பேச்சாளர் மறுத்தார்.

தனது இணையத்தளம் வாயிலாக நுழைவுச்சீட்டுகளை வாங்க முடியும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு டிக்கெட்மாஸ்டரின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இசைப் பிரபலங்களான அமெரிக்க பாடகி டெய்லர் சுவிஃப்ட், பிரிட்டனைச் சேர்ந்த கோல்ட்பிலே இசைக் குழுவினர் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை சிங்போஸ்ட் கிளைகளில் வாங்க சென்ற ஆண்டு பலர் இரவு பகலாக வரிசையில் காத்திருந்தனர். நுழைவுச்சீட்டுகளை டிக்கெட்மாஸ்டரின் இணையத்தளத்தில் வாங்க முடிந்தபோதும் வாடிக்கையாளர்கள் அவ்வாறு செய்தனர்.

சிங்போஸ்ட் கிளைகளில் நுழைவுச்சீட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறிய அவர்கள், டிக்கெட்மாஸ்டர் இணையத்தளம் சரியாகச் செயல்படவில்லை என்றும் குறை கூறினர்.

இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை வாங்க முடியாமல் போனதால் வரிசையில் காத்திருந்து சிங்போஸ்ட் கிளைகளில் வாங்கும் முயற்சியில் இறங்கியதாக சிலர் தெரிவித்தனர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!