டெல்லி: போதைப்பொருள் கடத்திய நைஜீரியப் பெண் கைது

புதுடெல்லி: மும்பை நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளைக் கடத்த முயன்ற நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையில் நைஜீரியாவைச் சேர்ந்த விக்டோரியா ஒக்காஃபார் என்ற பெண் பிடிபட்டார். அவர் மும்பையில் இருந்து டெல்லிக்கு போதை மருந்தை 20 குழாய் மாத்திரைகளில் அடைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்தப் பெண், அந்த வேலையைச் செய்யச் சொன்னவர் பெயர் ஒன் ஒன்யே என்று தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்தப் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் ஒன் ஒன்யே என்ற நைஜீரியரை தேடும் பணியை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

விக்டோரியாவிடம் நடந்த விசாரணையின்போது அவர் போதைப்பொருள் கொண்டு செல்வது பற்றி தான் அறிந்திருந்ததை ஒப்புக்கொண்டார்.

நல்லசோரா என்னுமிடத்தில் ஒன் ஒன்யே என்பவரால் இவை தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறிய அவர், ரூ.50,000 பணத்திற்காக இந்த வேலையை தாம் ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் ரூ.36 கோடி மதிப்புள்ள 5.2 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அது தொடர்பாக எத்தியோப்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அந்தப் பெண் தனது கைப்பைக்குள் உள்ள ஓட்டைக்குள் போதைப்பொருளை ஒளித்து வைத்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!