ஏன் உங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்: ராகுல் காந்தி

அம்பிகாபூர்: பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஏன் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக (OBC) அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்நிலையில், சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் நடந்த தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர், “பிரதமர் மோடி ஒவ்வொரு மேடையிலும் பேசும்போது நான் ஒரு ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால் நான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பற்றிப் பேசும்போது, இந்தியாவில் சாதியே கிடையாது. அதைத் தாண்டி சாதி இருக்கிறதென்றால், அது ஏழை என்ற ஒரேயொரு சாதிதான் என்று சொல்கிறார். பிறகு ஏன் பிரதமர் மோடி தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக (OBC) அடையாளப்படுத்திக் கொள்கிறார்?

“கறுப்புப் பணம், பணமதிப்பு நீக்கம் தொடர்பாகப் பிரதமர் மோடி அளித்த அனைத்து வாக்குறுதிகளும் பொய்யானவை. உங்களுக்கு ரூ.15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்தார். நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்களா? பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்றார். அது நடந்ததா?

“விவசாய மசோதாவால் (Farm Bill) விவசாயிகள் பயனடைவார்கள் என்றார். விவசாயிகளே அந்த மசோதாவை நிராகரித்தனர். யார் உண்மையைப் பேசுகிறார்கள், யார் பொய் சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த தேர்தலின்போது விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது,” என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!