சிங்கப்பூர், வியட்னாம் நாடுகளுக்கு ஜெய்சங்கர் பயணம்

புதுடெல்லி: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சிங்கப்பூர் மற்றும் வியட்னாம் நாடுகளுக்கான தமது பயணத்தை ஞாயிற்றுக் கிழமை அன்று தொடங்கியிருக்கிறார்.

முதலாவதாக வியட்னாமுக்கு அவர் செல்வதாக இந்திய நாளேடு தினமணி தெரிவித்தது.

அக்டோபா் 18ஆம் தேதி வரை ஆறு நாள்கள் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறாா்.

இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் பேச்சுவாா்த்தைகளில் அவா் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாக அந்த நாளேடு குறிப்பிட்டது.

தென்கிழக்கு ஆசியாவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடான வியட்னாமுக்கு சிறிய ரக போா்க்கப்பலான ஐஎன்எஸ் கிா்பானை அண்மையில் இந்தியா பரிசளித்தது.

தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

முழுமையாக செயல்பாட்டில் உள்ள ஒரு போா்க்கப்பலை நட்பு நாட்டிடம் இந்தியா ஒப்படைத்தது இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா-வியட்னாம் கூட்டு ஆணையத்தின் 18வது கூட்டத்தில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் பியூ தான் சன்னுடன் இணைந்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்கவுள்ளாா்.

ஹனோய், ஹோ சி மின் ஆகிய நகரங்களுக்கும் பயணம் மேற்கொண்டு பல்வேறு தலைவா்கள், இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாடவுள்ளாா்.

ஹோ சி மின் நகரில் மகாத்மா காந்தியின் சிலையை அவா் திறந்துவைக்கிறார்.

அதன் பிறகு சிங்கப்பூா் செல்லும் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அக்டோபா் 19, 20 தேதிகளில் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் மற்றும் இதர தலைவா்களை அவர் சந்தித்துப் பேசுவார்.

இந்தியா-சிங்கப்பூா் இடையிலான உறவுகள், கடந்த 2015ஆம் ஆண்டில் வியூக கூட்டாண்மை தகுதிக்கு மேம்பட்டன.

டெல்லியில் நடைபெற்ற அண்மைய ஜி20 உச்சநிலை மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சிங்கப்பூா் பங்கேற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!