இந்திய கோடீஸ்வரர்களில் அம்பானி மீண்டும் முதலிடம்

மும்பை: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவா் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளாா். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.8.08 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அதானி நிறுவனங்களின் தலைவா் கவுதம் அதானியின் சொத்துகள் 57 விழுக்காடு சரிந்து ரூ.4.47 லட்சம் கோடியுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா்.

அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கை காரணமாக அதானியின் சொத்து மதிப்பு சரிந்தது. ‘ஹுருன் இந்தியா’ வெளியிட்டுள்ள இந்திய செல்வந்தா்களின் பட்டியலில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு 6வது இடத்தில் இருந்த அதானியின் சொத்துகள் நடப்பாண்டு 5 மடங்கு அதிகரித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 2.1 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அவர் இந்திய பணக்காரர்களில் மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளார்.

மூன்றாம் இடத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவா் அதாா் பூனாவாலாவின் சொத்து மதிப்பு (ரூ.2.78 லட்சம் கோடி) மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவா் சிவ நாடாரின் சொத்து மதிப்பு 23 விழுக்காடு அதிகரித்துள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ.2.28 லட்சம் கோடி ஆகும். இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் வரிசையில் சிவ நாடார் 4வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 1,319 பணக்காரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு 2 புதிய கோடீஸ்வரா்கள் இந்தியாவில் உருவாகி வந்தனா். தற்போது இந்த எண்ணிக்கை 259ஆக உள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகமாகும்.

இந்தியாவில் 51 பணக்காரர்களின் சொத்துகள் நடப்பாண்டில் இரட்டிப்பாகி உள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 24ஆக இருந்தது. மும்பையை சோ்ந்த 328 பேரும் டெல்லியில் 199 பேரும், பெங்களூரில் 100 பேரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

கோடீஸ்வர பணக்காரர்களை உருவாக்கும் முதல் 20 நகரங்களில் முதல் முறையாக திருப்பூரும் இடம் பெற்றுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!