புதுப் படங்கள் வெளியீடு: காத்திருக்கும் ரசிகர்கள்

நடப்பாண்டில் முதல் மூன்று மாதங்களில் பிரம்மாண்டப் படைப்புகள் எதுவும் திரைகாணவில்லை. இந்நிலையில், முன்னணி நாயகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.

‘இந்தியன் 2’, ‘வேட்டையன்’ ஆகிய இரு படங்களின் வெளியீடு குறித்து கடந்த வாரம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் வெளியீடு குறித்தும் அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’, விக்ரமின் ‘தங்கலான்’, சூர்யாவின் ‘கங்குவா’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு கிட்டத்தட்ட தயாராகிவிட்டன.

அடுத்து கார்த்தி நடித்து வரும் இரண்டு புதுப் படங்கள், சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’, சூரி நடிக்கும் ‘விடுதலை 2’ உள்ளிட்ட பல படங்களின் வெளியீடு காண உள்ளன.

இப்படங்களைத் தவிர குறைந்த செலவில் தயாரிக்கப்படும் சில முக்கியமான படங்களின் வெளியீட்டுத் தேதிகளும் சித்திரைப் புத்தாண்டுக்குப் பிறகு வெளிவரக்கூடும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!