இவை பெருமைக்குரிய மாற்றங்கள்: ஹன்சிகா

திருமணத்துக்குப் பிறகு தனது திரையுலகப் பயணத்தில் மீண்டும் தமக்கு உற்சாகம் அளிக்கும் சுவாரசியமான வாய்ப்புகள் தேடிவருவதாகச் சொல்கிறார் ஹன்சிகா.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்த் திரையுலகில் வணிக அம்சங்கள் நிறைந்த படம் என்றால் இயக்குநர், தயாரிப்பாளர் தரப்பு முதலில் பரிசீலித்த பெயர் ஹன்சிகாவாகத்தான் இருக்கும்.

இன்று திரையுலகில் நிலைமை மாறிவிட்டது. தமிழில் நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இவையெல்லாம் பெருமைக்குரிய மாற்றங்கள் என்கிறார்.

“பொதுவாக எந்தத் துறையாக இருந்தாலும் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்வது வழக்கமானதுதான். என்னைப் பொறுத்தவரை தென்னிந்தியத் திரையுலகை எப்போதுமே உற்றுக் கவனித்து வருகிறேன்.

“மாற்றங்கள் நிகழும்போது அவற்றுடன் நானும் இணைந்து பயணிக்க வேண்டும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நல்ல கதை அமையும்போது அதன் மீது இயல்பாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்படும். அதுபோன்ற கதைகளில் நடிக்க தயங்கமாட்டேன்.

“திரையுலகில் அறிமுகமானபோது நிலைமை எப்படி இருந்தது என நினைத்துப் பார்த்தால் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. புதுமுகமாக இருந்தபோது என்னை நம்பி கனமான கதாபாத்திரங்களை யாரும் ஒதுக்கவில்லை.

அதன் பிறகு படிப்படியாக எனது திறமையை நிரூபித்தேன். இன்று தனி நாயகியாக என்னை ஒப்பந்தம் செய்கிறார்கள் எனில் அதற்கு என்னுடைய உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் முதன்மைக் காரணங்கள்.

“எனவே, என்னை நம்பி நல்ல கதாபாத்திரங்களை ஒப்படைக்க இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர். அவர்களுக்கு என் மீது முழு நம்பிக்கை உள்ளது. இதைத்தான் திரையுலகில் நான் சாதித்த ஆகப்பெரிய சாதனையாகக் கருதுகிறேன். இதற்கான எனது உழைப்பு இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது,” என்கிறார் ஹன்சிகா.

தனி நாயகியாக நடிக்கும்போது பொறுப்புகள் அதிகரிப்பது மட்டுமல்லாமல் நடிப்பில் நல்ல முதிர்ச்சியும் ஏற்படுவதாகச் சொல்பவர், தனது கதாபாத்திரத்தின் பெயரே ஒரு படத்தின் தலைப்பாக அறிவிக்கப்படும்போது பெருமையாக உணர்வதாகக் கூறுகிறார்.

“உண்மையாகவே இது பெருமைக்குரிய மாற்றம்தான். எனது கதாபாத்திரம், அதன் பெயரை வைத்து ஊடகங்களில் பட விளம்பரங்கள் வெளிவருகின்றன. இதுவரை நான் ஏற்று நடித்த பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்கள், திரைப்படங்கள் மூலம் நான் பெற்றுள்ள வளர்ச்சி இது. இப்போது நடித்து வரும் படங்கள் எனது திரைப்பயணத்தின் முக்கிய மைல் கற்களாக அமைந்துள்ளன,” என்கிறார் ஹன்சிகா.

தற்போது ‘கார்டியன்’, ‘ரவுடி பேபி’, ‘காந்தாரி’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரங்கள் அமைவதை உறுதி செய்த பிறகே நடிக்க ஒப்புக்கொள்கிறாராம்.

“நாயகியை மையப்படுத்தும் ‘மேன்’ திரைப்படம் மீதான எனது எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்தபடியே உள்ளது. இது எனது திரைப்பயணத்தின் முக்கியமான மைல்கல்லாக அமையும்.

“பெண்களின் முன்னேற்றத்தை வலியுறுத்தும் கதை இது. வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நாயகி, வாழ்க்கை அவள் மீது திணிக்கும் பல்வேறு கடினமான தருணங்களைக் கடந்து சாதிக்க முற்படுகிறாள் என்பதுதான் கதை. இதை திரையில் பார்க்கும்போது நிச்சயம் பாராட்டுவீர்கள்,” என்று மனம்நிறைந்த நம்பிக்கையுடன் சொல்கிறார் ஹன்சிகா.

கதாநாயகிகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் நோக்கமெல்லாம் தனக்கு இல்லை என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், திரையுலகில் நீடிப்பதற்காக தாம் எந்தவித திட்டங்களையும் வகுத்துச் செயல்படவில்லை என்கிறார்.

“திருமணத்துக்குப் பிறகும்கூட எனக்கான வாய்ப்புகளைத் தேடிச் செல்வதில்லை. மாறாக, நல்ல கதைகள் என்னைத் தேடிவருகின்றன. நல்ல படைப்புகளில் நானும் இடம்பெற வேண்டும் என விரும்புகிறேன். இதன் மூலம் ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டால் அதுவே போதும்.

“முன்னணி நடிகர்களின் படம், நாயகியை முன்னிலைப்படுத்தும் படைப்பு என எதுவாக இருந்தாலும் இதை மட்டுமே மனதில் நினைத்துக்கொள்வேன்.

“அதேபோல் கதைகளை தேர்வு செய்வதிலும் நிறைய விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. ரசிகர்களை மகிழ்விக்கும் எந்தக் கதையாக இருந்தாலும், அதில் நடிக்கத் தயார்,” என்கிறார் ஹன்சிகா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!