கொள்கையை மாற்றிக்கொண்ட நயன்தாரா

நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ‘அன்னபூரணி’ படத்தின் விளம்பரத்திற்காக தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நடிகை நயன்தாரா, நாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தாலும் தனியாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அப்படி அவர் நடித்திருக்கும் படம்தான் ‘அன்னபூரணி’. இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் நிலேஷ் குமார் இயக்கியுள்ளார். இது நயன்தாராவின் 75வது படமாகும்.

நடிகை நயன்தாரா, ஜெய் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘அன்னபூரணி’ படம். ஏற்கெனவே, ‘ராஜா ராணி’ படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த இவர்கள், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் இணைந்துள்ளனர்.

சமையல் தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் இருக்கும் அன்னபூரணி சந்திக்கும் சவால்களை இந்தப் படம் எடுத்துக் காட்டி உள்ளது.

நயன்தாரா தன்னுடைய படங்களுக்கான விளம்பர நிகழ்ச்சிகளில் எப்போதும் பங்கேற்காத கொள்கையை உடையவர்.

ஷாருக்கானுடன் இவர் முதல் முறையாக இணைந்த ‘ஜவான்’ படத்தின் விளம்பரங்களிலும் இவர் ஈடுபடவில்லை. இந்நிலையில் ‘அன்னபூரணி’ படத்திற்காக தன்னுடைய ரசிகர்களை முதன்முதலாக சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நயன்தாராவுடன் பேசி, மகிழ்ந்தனர். அவரைக் கட்டித்தழுவி அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கொண்டனர்.

மேலும் அவர் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கெல்லாம் நயன்தாரா மிகவும் உற்சாகமாக பதில் அளித்ததை இந்த நிகழ்வில் பார்க்க முடிந்தது என்றனர் செய்தியாளர்கள்.

இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா வழிநடத்தினார். சிறிது நேரத்தில் நடிகர் ஜெய், திடீரென வந்து ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தினார்.

படத்தில் சமையல் கலைஞராக நடித்ததால் நயன்தாராவும் ஜெய்யும் தன்னுடைய ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறினார்கள்.

படம் வெளியான முதல் நாளிலேயே இப்படம், ரூ.80 லட்சம் வசூலைத் தாண்டியதாக கூறப்படுகிறது. ‘அன்னபூரணி’ படத்துடன் சேர்த்து, ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ படமும் ‘அனிமல்’ படமும் வெளியானது. இந்தப் படங்களில் ‘அன்னபூரணி’ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த நாயகிகளுள் நயன்தாராவும் ஒருவர். ‘அன்னபூரணி’ படத்தை அடுத்து, மேலும் இரண்டு படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.

அதில் ஒரு படம், ‘டெஸ்ட்’. இந்தப் படத்தில் இவர் மாதவன் மற்றும் சித்தார்த்துடன் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் ‘மன்னாங்கட்டி சின்ஸ் 1960’. இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

படங்களில் மும்முரமாக நடிப்பது மட்டுமன்றி, தனியாக சில தொழில்களையும் நயன்தாரா செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் ‘9 ஸ்கின்ஸ்’ என்ற அழகு சாதன பொருள்களை அவர் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!